நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 9 ஜூலை, 2012

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தது


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப்படிவங்களை  பூர்த்தி  செய்து கொடுத்தது

       பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத்துறையின் சார்பாக நெல்லை மேற்கு மாவட்டம் முழுவதும் இன்று முஸ்லிம்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப்படிவங்களை  பூர்த்தி செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.


        இதன் ஒரு பகுதியாக 07.07.2012ஞாயிற்றுக்கிழமை) அன்று  கடையநல்ல்லுரில் இரண்டு இடங்களில் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட அலுவலகத்திலும்,அல்லிமூப்பன் தெருவில் உள்ள பிலால் பள்ளிவாசல் வளாகத்தில் வைத்தும் காலை 10.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில்  முன்பு கல்வி உதவித் தொகை பெற்றவர்கள் அதை புதுப்பிக்குவர்க்கும், இதுவரை கல்வி உதவித் தொகை வாங்காமல் இருப்பவர்களும் திரளாக வந்து விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து அப்படிவங்களை வாங்கிச்சென்றனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் லுக்மான் ஹக்கீம B.A,BL மேற்பார்வையிட்டார்.  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல் வீரர்கள் யாரிடமும் முகம் சுளிக்காமல் மிகச் சிறப்பாக தங்களது பணிகளை செய்தார்கள்.
         
          கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப்படிவங்கள் 500க்கும் மேலான படிவங்களை  பூ+ர்த்தி  செய்து கொடுத்தார்கள்.




இப்படிக்கு,
மக்கள் தொடர்பு அதிகாரி
அபூ ஹம்ஸா-7502510853
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
நெல்லைமேற்கு மாவட்டம்.



மேலும் படங்கள் கீழே