நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 11 ஜூலை, 2012

எதிரிகள் அஞ்சுவது அணு ஆயுதத்திற்கு அல்ல! இஸ்லாத்தின் எழுச்சியை கண்டு! – ஈரான்!


டெஹ்ரான்: எதிரிகள் அஞ்சுவது அணு ஆயுதத்தை கண்டு அல்ல என்றும் இஸ்லாத்தின் வளர்ச்சியே அவர்களின் அச்சத்திற்கு காரணம் என்றும் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ஸஈத் ஜலீலி கூறியுள்ளார்.
Jalili
மேற்காசியாவிலும், வடக்கு ஆப்பிரிக்காவிலும் மக்கள் விரோத அரசுகளை வீழ்த்திய இஸ்லாமிய எழுச்சிக்கு துனீசியாவின் புரட்சியே வழி காட்டியது. இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையில் முஸ்லிம் சமூகம் முன்னேறுமானால் சுதந்திர ஃபலஸ்தீன், அல்குத்ஸ் உள்ளிட்ட தங்களது அனைத்து லட்சியங்களையும் அவர்களால் அடைய முடியும் என்று அவர் கூறினார்.
துனீசியன் ஆளுங்கட்சியான அந்நஹ்ழாவின் பாராளுமன்ற ப்ளாக் தலைவர் அல் ஸஹ்பி ஆதிக்குடன் நடத்திய சந்திப்பில் ஜலீலி இதனை தெரிவித்தார்.
இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் நடத்தும் மனித உரிமை மீறல்களும், ஆக்கிரமிப்புகளும் ஆக்கப்பூர்வமான எதிர்ப்பின் மூலம் இஸ்லாமிய நாடுகளால் முறியடிக்க இயலும் என்பதை அண்மையில் நடந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் நிரூபித்துள்ளதாக ஜலீலி கூறினார்.