காஞ்சிபுரம் மாவட்டம், கானத்தூர் காவல் நிலையத்தில் வியாபாரி ஹுமாயூன் தீ வைத்து இறந்த சம்பவத்தை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தக் கோரியும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்க வலியுறுத்தியும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இன்று (12-07-2012) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் எஸ்.டி.பி.ஐ மாவட்டத் தலைவர் பிலால் தலைமை தாங்கினார். வட சென்னை எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் அமீர்ஹம்சா, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் விடுதலை செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென் சென்னை எஸ்.டி.பி.ஐ
மாவட்ட தலைவர் முகம்மது உசேன் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொது மக்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.