சென்னை:- புதுவண்ணாரப்பேட்டை மெட்ராஸ் போர்ட் டிரஸ்டில்
அமைந்துள்ள மஜ்ஸிதே மதினா பள்ளிவாசல் உள்புரம் கடந்த சனிக்கிழமை மாலை சமூக
விரோதிகள் சிலர் பன்றிக்குட்டியை கொன்று அதன் உடலை பள்ளிவாசலில் வீசிவிட்டு
சென்றுள்ளனர். இது தொடர்பாக உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டிய
காவல்துறையினர் இச்சம்பவத்தை மூடி மறைத்த்தோடு மட்டுமல்லாமல் கண் துடைப்பிற்காக 12
முதல் 15 வயதிற்கு உட்பட சில சிறுவர்களை கைது செய்து பின்னர்
விடுவித்திருக்கிறார்கள்.
முஸ்லிம்களின் புனித ஸ்தலத்திற்குள் பன்றியை கொன்று வீசும் செயல்கள்
தமிழகத்தில் தற்போது தொடர்கதையாகி வலுகிறது.இதே போன்ற சம்பவம் கடந்த வருடம்
மதுரையிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மத மோதல்களை உருவாக்க சமூக விரோதிகள்
முயற்சி செய்வதாகவே தெரிகிறது. எனவே காவல்துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு
உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட்
ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு,
இப்றாஹிம்(மாநில பொருளாளர்)