நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 17 ஜூலை, 2012

அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் ஒற்றுமையான போராட்டத்தால் திணறிய பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் வயதைக் காரணம் காட்டி முஸ்லிம் பெண்ணின் திருமணத்தை தடுத்து பெற்றோரை கைது செய்த மாவட்ட ஆட்சியரின் அதிகார துஷ் பிரயோகத்தை கண்டித்தும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் அத்துமீறி தலையிட்டு இந்திய நீதி மன்றத்தை 
அவமதித்து முஸ்லிம் திருமணத்தை தடுத்து நிறுத்திய பெரம்பலூர் மாவட்ட ஆட்சி தலைவரை கண்டித்தும், இம்மாவட்ட காவல் துறையை கண்டித்தும் முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றினைந்து நடத்திய போராட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு இன்று 17-07-2012 அன்று நடைபெற்றது. 




ஜமாத்துல் உலமா தலைவர் அப்துல் ரஹ்மான் ஆலிம் தலைமையில் ,பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தலைவர் இஸ்மாயில் ,இந்திய தௌஹீத் ஜமாஅத் தலைவர் S .M பாக்கர் ,த மு மு க மூத்த தலைவர் ஹைதர் அலி அ, SDPI தமிழ் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி , ,இந்திய தேசிய லீக் இனாயதுல்லாஹ் ,தேசிய லீக் பசீர் அஹ்மத் ,சுன்னத்துவல் ஐக்கிய பேரவை தலைவர் மேலை நாசர் ,மறு மலர்ச்சி முஸ்லிம் லீக் உமர் பாருக் ,வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா சிங்கந்தர் ,தேசிய லீக் பசீர் அஹ்மத் ,ஆல் இந்தியா மில்லி கவுன்சில் அமீர் அலி ,தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் முஹம்மத் மன்சூர் ,இஸ்லாமிய விழிபுணர்வு கழகம் முஹம்மத் கான் பாக்கவி மேலும் பல இயக்க தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர் ,இந்த நிகழ்ச்சியை முஹம்மத் ஹனிபா ஒருகிணைந்து வழங்கினார் இந்த் நிகழ்ச்சியில் அணைத்து இஸ்லாமிய இயக்கங்களின் தொண்டர்களும் ,பள்ளிவாசல் ஜமாதர்களும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்,.