தமிழக மீனவர் சேகர் மீது துப்பாக்கிசூடு நடத்தி கொலை சைய்த அமெரிக்க கப்பல் படையை கண்டித்தும்,இந்திய சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய
முதலீடு தேவை என்று கருத்து கூறிய அமெரிக்க ஒபாமாவின் அத்துமீறலை கண்டித்தும் SDPI கட்சியின் அமெரிக்க தூதரகம் முற்றுகை போராட்டம் இன்று(19:07:2012)காலை 11 மணி அளவில் அமெரிக்க தூதரகம் முன்பு முற்றுகை போராட்டம் தொடங்கியது, இதில் SDPI மாநில செயலாளர் சையது அலி அவர்கள் தலைமை தங்கினார்கள்,
இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரத்தினம் அண்ணாச்சி, ஜாகிர் உசேன் மற்றும் மாநில பேச்சாளரும் SDPI தென் சென்னை மாவட்ட தலைவருமான P. முஹம்மத் ஹுசைன் அவர்களும் மற்றும் வட சென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்சா, திருவள்ளூர் மாவட்ட தலைவர் புஹாரி, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்காவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதுடன், துப்பாக்கிச்சூடு செய்த அமெரிக்க படையினர் கைது செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினர். திரளாக முற்றுகையிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினரை போலிசார் கைது செய்தனர்
குறிப்பு : இந்த முற்றுகை போராட்ற்றதிக்கான எல்லா ஏற்பாடுகளையும் தென் சென்னை மாவட்ட செயற்குழு உறப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்