கடையநல்லூர் :- உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச்-8ல் “பெண்களின்
பாதுகாப்பே தேசத்தின் பாதுகாப்பு” என்ற
முழக்கத்தோடு நாடுமுழுவதும் நேஷனல் உமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக பொதுக்கூட்டம்,பேரணி,கருத்தரங் கம், மற்றும் கட்டுரைபோட்டிகள்
நடந்தன.
அதன் ஒரு பகுதியாக நெல்லை மேற்கு மாவட்டத்தில் “நேஷனல்
உமன்ஸ் ஃப்ரண்ட்” சார்பாக மார்ச் 10,2013 அன்று
கடையநல்லூர் பேட்டை காதர் மைதின் ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் கருத்தரங் கம் நடைபெற்றது.
"பெண்களின் பாதுகாப்பே தேசத்தின் பாதுகாப்பு" என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரன்டின் நெல்லை மேற்கு மாவட்ட தலைவி ருக்கையா அவர்கள் தலைமை தாங்கினார்.
கிராஅத்துடன் சரியாக 3:00மணியளவில் கருத்தரங்கம் துவங்கியது.
கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய நேஷனல் விமன்ஸ்
ஃப்ரன்டின் மாநில பொருளாளர் N.ஜன்னதுல்
பிர்தௌஸ் அவர்கள் கலாச்சார சீரழிவுகளும்
மாற்றத்திற்கான அவசியமும் குறித்து
விரிவாக பேசினார்.
தொடர்ந்து பேசிய நேஷனல் விமன்ஸ் ஃப்ரன்டின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் பிஸ்மி அவர்கள் நாம் செய்ய வேண்டியவை எனும் தலைப்பில் உரையாற்றினர் இதனைத்தொடர்ந்து கீழ்வரும்
தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டரத்தை சேர்ந்த 300 பெண்கள் கலந்து கொண்டு
பயனடைந்தனர்.
தீர்மானங்கள்
1. பெண்களுக்கு பாதுகாப்பளிக்கும் சட்டங்களை முறையாக நடைமுறை படுத்த
வேண்டும். கஷ்மீர், மணிப்பூர்,குஜராத் உட்பட பிரச்சினைக்குறிய இடங்களில் பெண்களின் பாதுகாப்பு
மற்றும் நிவாரணம் குறித்து மத்திய மாநில அரசுகள் உரிய முக்கியத்துவம் கொடுக்க
வேண்டும். இது போன்ற சமூக விரோதசெயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள்
தண்டிக்கப்படுவதன் மூலம் சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவேண்டும்
என கேட்டுக்கொள்கிறது
2. பாலியல் கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும்.
இது போன்ற கொடுமைகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வண்ணம் பாதுகாப்பான சமூக சூழலை
உருவாக்கும் அனைத்து முயற்சிகளிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் அரசே
ஈடுபடவேண்டும். குறிப்பாக மனிதர்களின் மிருக உணர்சிகளை தூண்டக்கூடிய பாலியல்
மற்றும் வன்முறை காட்சிகளைக்கொண்ட சினிமா, நாடகம், மற்றும்
விளம்பரங்களை தடை செய்ய வேண்டும்.
3 . கலாச்சாரத்தை பாதிக்கின்ற
மது மற்றும் போதை பொருட்களை மத்திய மாநில அரசுகள்தடை செய்ய வேண்டும்
4. தேசத்தின் வளமும் நலனும் பாதுகாப்பும் பெண்களின்
பாதுகாப்பை பொறுத்து தான் அமையும் என நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் நம்புகிறது. எனவே
தேச நலன் கருதி பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுய முன்னேற்றத்திற்காகவும் குடும்பகட்டமைப்பையும் கலாசாரத்தையும்
பாதுகாக்கவும் பாடுபட்டு வரும் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டிற்கு அனைத்து தரப்பு
மக்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுக்கிறது.
5. மக்களின் அடிப்படை தேவைகள் உட்பட அரசின்
அனைத்து நலத்திட்ட உதவிகள் பயனாளிகளிடம் முறையாக சென்று சேர்வதை அரசு உறுதி
செய்யவேண்டும். குறிப்பாக கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள்,முதியோர்
ஓய்வூதியத்தொகை வழங்குவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கலை களையவேண்டும் என அரசை
இக்கருத்தரங்கம் வாயிலாக நேஷனல் விமன்ஸ் ஃபரண்ட் கேட்டுக்கொள்கிறது.