நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கபடுவதையும் நித்தம் நித்தம் சிறை பிடிக்கபட்டு வருவதையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வண்மையாக கண்டிக்கிறது.
மீன்பிடித் தொழில் ஒன்றையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டு செயல்படும் தமிழக கடலோர மாவட்ட மீனவகுடும்பங்கள் இன்று நிம்மதி இல்லாத வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர். கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தங்கள் வீட்டு ஆண்கள் கரை திரும்புவார்களா மாட்டார்களா என எதிர்பார்த்து காத்து கிடக்கும் சூழ்நிலையில் மீனவ குடும்பத்து பெண்கள் உள்ளனர்.
சொந்த நாட்டு குடிமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய மத்திய அரசு தமிழக மீனவர்கள் பாதுகாப்பு விசயத்தில் மெத்தனமாக செயல்பட்டு வருகிறது. தமிழக மீன்பவர்களின் பாதுகாப்பு விசயத்தில் இரண்டாம் தாய் மனப்பான்மையுடன் செயல்படும் மத்திய அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வண்மையாக கண்டிக்கிறது .
தமிழக கடலோர பாதுகாப்பை மத்திய அரசு பலப்படுத்த வேண்டும்.மேலும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு விசயத்தில் கட்சத்தீவை மீட்பது ஒன்றே நிரந்தர தீர்வாக இருப்பதால் மத்திய மாநில அரசுகள் அதற்கான முயற்ச்சியை உடனே எடுக்கவேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக் கொள்கிறது .
இப்படிக்கு
ஜெ. முகம்மது ரசீன்
மாநில செயலாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நாடு