கடையநல்லூர் : மார்ச்16 அன்று கடையநல்லூரில்
மதினா நகர் மற்றும் பேட்டை பகுதிகளில் மார்க்க கல்வியின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு வலியுறுத்தும் விதமாக
சிறார்கள் கைகளில்
பதாகைகளை ஏந்தியவண்ணம் மாபெரும் பேரணி
நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நகர சபை உறுப்பினரும் SDPI - ன் மாவட்ட பொருளாளருமான நைனா முஹம்மது (எ) கனி
முன்னிலை வகித்தார். பேரணியை மதினா நகர் ஜமாஅத் தலைவர் கொடியசைத்து துவக்கி
வைத்தார்.
நூற்றுக்கணக்கான சிறார்கள்
மற்றும் சிறுமியர் அடங்கிய இந்த பேரணி மதினா நகர் மற்றும் பேட்டையில் உள்ள
பல்வேறு தெருக்கள் வழியாக சென்று இறுதியில் பேரணி பேட்டை ஜலாலியா மதரசாவை அடைந்தது.
வழிநெடுகிலும் “மார்க்கக்
கல்வி கற்போம் - நபிவழி நடப்போம்”
என்ற கோஷங்களை உயர முழங்கி
வந்த மழலை செல்வங்களை பேட்டை ஜமாஅத் தலைவர் அவர்கள் வரவேற்று
இனிப்புகள் மற்றும் குளிர்பானங்கள்
வழங்கி பாராட்டினார் .
இந்நிகழ்ச்சியில் பாப்புலர்
ஃப்ரண்டின் நகர நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், SDPI நகர
நிர்வாகிகள் செயல்வீரர்கள் , பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.