புதுடெல்லி: நரேந்திர மோடியின் குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஊடகங்கள் மூடி மறைத்து வருகின்றன.
கடந்த மாதமும், இம்மாதமும் குஜராத்தின் சோட்டா உதய்பூரில் முஸ்லிம்களின் நிறுவனங்கள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. முஸ்லிம்களும், பழங்குடியினரும் இப்பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர். பழங்குடியினரை பயன்படுத்தி சங்க்பரிவார்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
அன்ஹத்(ஆக்ட் நவ் ஃபார் ஹார்மனி அண்ட் டெமோக்ரஸி) என்ற அமைப்பு சம்பவம் நடந்த இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்து தயாரித்த அறிக்கையில் இந்த தகவல்கள் கூறப்பட்டுள்ளன.
கடந்த மாதமும், இம்மாதமும் குஜராத்தின் சோட்டா உதய்பூரில் முஸ்லிம்களின் நிறுவனங்கள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. முஸ்லிம்களும், பழங்குடியினரும் இப்பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர். பழங்குடியினரை பயன்படுத்தி சங்க்பரிவார்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
சோட்டா உதய்பூரில் அகாபாரா, வஸேலி, வானார் காம், தேடர் உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்களுக்கு அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்கள் நடத்தி வரும் நான்கிற்கும் மேற்பட்ட மினரல் பவுடர் தயாரிப்பு தொழிற்சாலைகள், சுரங்கங்கள், வியாபார நிறுவனங்கள், பண்ணைகள், ப்ளாஸ்டிக் குடோன்கள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு காட்சி ஊடகங்கள் இங்குள்ள காட்சிகளை படம் பிடித்தபோதும் தொலைக்காட்சி சானல்கள் எதுவுமே இதுத்தொடர்பான செய்திகளையோ, காட்சிகளையோ ஒளிபரப்பவில்லை என்று உள்ளூர் மக்கள் கூறியதாக அன்ஹதின் ஸ்தாபக உறுப்பினர் ஷப்னம் ஹாஷ்மி செய்தியாளர்கள் சந்திப்பில்தெரிவித்தார்.
கடந்த மாதம் பஸ் ரூட் தொடர்பாக உருவான சிறியச் சண்டை முஸ்லிம்களுக்கு எதிரான அமைப்பு ரீதியான தாக்குதலுக்கு காரணமானது. பரோஜ் கிராமத்தைச் சார்ந்த சர்பஞ்சும், பஸ் உரிமையாளருமான ஜயந்தி ரத்வா, அலிராஜ்பூர்-சோட்டா உதய்பூர் ரூட்டில் உள்ள பஸ் சர்வீஸ்கள் அனைத்தையும் சொந்தமாக்குவதற்கு உருவாக்கிய பிரச்சனைகள் தாம் கலவரத்திற்கு வழிவகுத்தது.
இர்ஃபான் அப்துல் கனி, மெஹ்பூப் அப்துல் கனி ஆகியோரின் பேருந்துகளும் இந்த ரூட்டில் சர்வீஸ் நடத்துகின்றன. ரத்வாவின் பேருந்து இவர்களின் பேருந்துடன் மோதி, தொடர்ந்து ஏற்பட்ட வாக்கு தர்க்கம் முஸ்லிம்கள் மீது சிறிய அளவிலான தாக்குதல்கள் நடத்தப்பட காரணமானது. ஆனால், முஸ்லிம்களின் குடோன்களை தீக்கிரையாக்கி விட்டு, பழங்குடியினர் மீது தாக்குதலும், அத்துமீறலும் நடப்பதாகவும் 13-ஆம் தேதி சோட்டா உதய்பூரில் முழு அடைப்பு நடத்தப்படும் என்றும் அறிவிக்கும் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. நோட்டீஸில் அதனை வெளியிட்டவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. பழங்குடியின தலைவர்கள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.
சர்பஞ்ச்(பஞ்சாயத்து தலைவர்) ஜயந்தி ரத்வா, ஈஸ்வர் டேத்க ரத்வா ஆகியோர் தாம் இந்த நோட்டீஸ்களை அச்சிட்டவர்கள் என்று அன்ஹத் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. நோட்டீஸ் விநியோகிக்கப்பட்ட மறு நாள் சோட்டா உதய்பூரின் கனாவத்தில் பழங்குடியினத்தைச் சார்ந்த ஒருவரின் ட்ரக்கும் ஒரு முஸ்லிமின் ட்ரக்கும் மோதிக் கொண்டன. இதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீது தீவிரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முஸ்லிம்கள் உடனடியாக போலீஸ் ஸ்டேசன் சென்று புகார் அளித்த போதும் பழங்குடியினர் போலீஸ் ஸ்டேசனை சுற்றி வளைத்து மிரட்டல் விடுத்தனர். ஆனால், போலீஸ் வழக்குப் பதிவுச் செய்யவில்லை. பின்னர் மீண்டும் முஸ்லிம்கள் மீது பெரிய அளவில் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. முஸ்லிம்களும் திரண்டதைத் தொடர்ந்து போலீஸ் முஸ்லிம்களிடம் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியது.
கலவரம் நடக்கும் பொழுது முஸ்லிம்களை வீடியோ எடுத்து போலீசுக்கு அளிக்கும் திவ்ய பாஸ்கர் என்ற பத்திரிகையாளரின் சில இளைஞர்கள் தடுத்து கேமராவை பறிக்க முயற்சித்தனர். இதற்கு எதிராக பாஸ்கர் தொடர்ந்த வழக்கில் போலீஸ் பல முஸ்லிம்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவுச் செய்தது. 24 முஸ்லிம்கள் மீது வழக்குப் பதிவுச் செய்த போலீஸ் 8 பழங்குடியினர் மீது மட்டுமே வழக்குப் போட்டது. அடுத்த நாள் பல்வேறு சிறுபான்மை வியாபார நிறுவனங்கள் மீது தாக்குதல் நடந்தன.
டி.ஐ.ஜி, எஸ்.பி.ராங்கில் உள்ள அதிகாரிகள் அங்கு வந்து முதல் தகவல் அறிக்கையை பதிவுச் செய்தனர். ஆனால், குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. முஸ்லிம்களுக்கு சொந்தமான ஒரு ப்ளாஸ்டிக் குடோனை தீக்கிரையாக்கிய சோட்டா உதய்பூரில் ரவுடிக் கும்பலின் பெயர் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவனோசுதந்திரமாக நடமாடுகிறான். 13-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட முழு அடைப்பை வெற்றிப் பெறச் செய்ய வி.ஹெச்.பி நேரடியாக களமிறங்கியது.
இம்மாதம் 8 மற்றும் 11-ஆம் தேதிகளில் மீண்டும் முஸ்லிம்களின் குடோன்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவ்வழக்கில் ஒருவரை போலீஸ் கைது செய்துள்ளது. சில உயர் மட்டத் தலைவர்களின் உத்தரவின் பேரிலேயே குடோன்களுக்கு தீவைத்ததாக இந்த நபர் முதலில் வாக்குமூலம் அளித்தான். ஆனால், பின்னர் பீடித்துண்டு கீழே விழுந்து அதில் இருந்து உருவான நெருப்பு மூலம் குடோன்களுக்கு தீப்பிடித்ததாக போலீஸ் வாக்குமூலத்தை மாற்றியது. ஆனால், இவையெல்லாம் மோடியின் போலீசுக்கோ, மோடியிடம் ஆதாயம் பெறும் ஊடகங்களுக்கோ ஒரு செய்தியே அல்ல.
நரேந்திர மோடியின் உத்தரவுக்கு கீழ்படியும் அடிமை சேவகம் புரிவதாக குஜராத் ஊடகங்கள் மீது ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்தது. முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் திட்டமிட்ட அமைப்பு ரீதியான தாக்குதல்களும், கொள்ளையும், தீவைப்புச் சம்பவங்களும் வெளியுலகிற்கு தெரியாமல் மறைக்கப்படுவதன் மூலம் இந்த குற்றச்சாட்டு நிரூபணமாகிறது.