நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 30 அக்டோபர், 2013

சென்னையில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் நடத்திய பொதுக்கூட்டம் !



ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக மத்தியில் 10% மாநிலத்தில் 7% முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க மத்திய மாநில அரசை வலியுறுத்தி மண்ணடி தம்புச் செட்டி தெருவில் 27. 10. 2013 அன்று மாலை 6. 30 மணியளவில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தமிழ் மாநில தலைவர் மௌலவி ஏ. ஆபிருத்தீன் மன்பயீ அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 




ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சென்னை மாவட்ட தலைவர் மௌலவி ஏ. எம். எம். சாலிஹ் சேட் பாகவி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி ஜே. முஹம்மது இப்ராஹிம் மிஸ்பாஹி அவர்கள் துவக்கவுரை ஆற்றினார். 



இப்பொதுக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் புதுச்சேரி மாநில தலைவர் மௌலவி காரி ஆர். அப்துல் காதிர் தேவ்பந்தி அவர்களும், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில வர்த்தகர் அணி தலைவர் ஜனாப் எஸ். அமீர் ஹம்சா அவர்களும் முன்னிலை வகித்தனர். இஸ்லாமிய விழிப்புணர்வு கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் மௌலவி ஜி.எம். தர்வேஷ் ரஷாதி அவர்கள், ஐக்கிய சமாதானப் பேரவையின் மாநில தலைவர் மௌலவி என். ஹாமித் பக்கிரி மன்பயீ அவர்கள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் ஜனாப் ஏ. ஹாலித் முஹம்மது அவர்கள் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி ஆர்.எம். முஹம்மது அபுபக்கர் சித்தீக் ரஷாதி அவர்கள் தீர்மானங்கள் வாசித்தார். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் சென்னை மாவட்ட செயலாளார் மௌலவி எஸ். தமீமுல் அன்சாரி காஷிஃபி அவர்கள் நன்றியுரை நிகழ்த்திய இக்கூட்டத்தில் பல உலமாபெருமக்களும், இமாம்களும், பொதுமக்களும் பெரும்திரளாக கலந்து கொண்டனர் பின் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




தீர்மானம்:1
2005 மார்ச் 15 அன்று மத்திய அரசு ரெங்கநாத் மிஸ்ரா கமிஷனை அமைத்தது. 2007 மே22 அன்று தனது அறிக்கையை அக்குழு பிரதமரிடம் சமர்பித்தது. அதில் மிக முக்கியமான பரிந்துரை முஸ்லிம்களுக்கு 10 சதவிகித தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது தான். ரெங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை செய்த 10 சதவிகித தனி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் வலியுறுத்துகிறது.



தீர்மானம்:2
தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை முஸ்லிம்களின் கல்வி வேலை வாய்ப்பு நிலைகளை கருத்தில் கொண்டும் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் அடிப்படையிலும் 3.5 சதவிகித்தை 7 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என மாநில அரசை இப்பொதுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. 



தீர்மானம்:3
தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள 3.5 சதவிகித இடஒதுக்கீடு சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து செயல்படுத்த வேண்டும் என இப்பொதுக்கூட்டம் மாநில அரசை கேட்டுக்கொள்கிறது. 



தீர்மானம்:4
அஷ்ரப், அஜ்லப், அர்ஸல் என வகைப்படுத்தி அஷ்ரப் வகை முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டு பயனிலிருந்து தடுக்கப்படுகின்றனர். இந்நிலை கைவிடப்பட்டு முஸ்லிம்கள் அனைவரும் கல்வி - பொருளாதாரம், சமூக அந்தஸ்துகளில் பின்தங்கி இருப்பதை கவனத்தில் கொண்டு அனைத்து முஸ்லிம்களும் இட ஒதுக்கீட்டுப் பயனை அடைய வழிவகை செய்திட வேண்டும் என இப்பொதுக்கூட்டம் மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது.