பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும்“ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், அரசு மருத்துவமனைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெற உள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக "ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்" என்ற முழக்கத்தை முன் வைத்து மினி மாரத்தான் ஓட்டம் மற்றும் யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மேற்கு மாவட்டத் தலைவர் D.செய்யது இப்ராஹிம் உஸ்மானி அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞருமான K.S லுக்மான் ஹக்கீம் அவர்கள் துவக்க உரை ஆற்றினர். இதில் சிறப்பு விருந்தினராக SDPI கட்சியின் நெல்லை மேற்கு மாவட்டத் தலைவர் J.ஜாபர் அலி உஸ்மானி அவர்களும், SDPI கட்சியின் நெல்லை மேற்கு மாவட்ட பொது செயலாளர் நல்லூர் உசேன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக இந்நிகழ்ச்சிக்கு தென்காசி நகர தலைவர் முஹம்மது தாரிக் அவர்கள் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியினை சகோதரர் திவான் மைதின் தொகுத்து வழங்கினார். இந்த மாரத்தான் ஓட்டத்தில் சுமார் 200க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.