பாப்புலர்
ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக, கடையநல்லூரில்
மீண்டும் பரவிவரும் மர்மக் (டெங்கு) காய்ச்சலைக் கட்டுப் படுத்தும் விதமாக
ஆங்காங்கே விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டும் மேலும் நில வேம்புக் கசாயம்
வழங்கப்பட்டும் வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று 01-12-2013 ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணி அளவில் கடையநல்லூர் மக்கா நகர் பகுதியில் வைத்து டெங்கு விழிப்புணர்வு மற்றும் நில வேம்புக் கசாயம் வழங்கும் முகாம், மக்கா நகர் கிளைத் தலைவர் A. முஹம்மது ஹூஸைன் தலைமையில் நடைபெற்றது.

இதனை மக்கா
நகர் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் அசன்
கான் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த முகாமில்
1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கசாயம் வாங்கி சென்று பயனடைந்தனர். இது
போன்ற முகாம்கள் மீண்டும் எங்கள் பகுதியில்
நடத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கேட்டுக்
கொண்டனர்.