கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான அறிவிப்பு 21-7-2010 அன்று அறிவிக்கப்பட்டது. அதில் பொதுவான காலியிடமாக 1576 மற்றும் பட்டியல் வகுப்பினர், பட்டியல் வகுப்பினர் (அருந்ததியர்), பட்டியல் பழங்குடியினர் (SC, SC (A), ST) பிரிவினருக்கான குறைவு பணியிடங்களுக்கான (Backlog Reserve Vacancies) காலியிடங்களாக 1077-வும் அறிவிக்கப்பட்டது. இந்த குறைவுப் பணி யிடங்கள் என்பது கடந்த காலங்களில் முறையாக தமிழக அரசால் எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கான காலியிடங்களில் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததனால், தேசிய அட்டவணை வகுப்பினர் ஆணையம் (NCSC- National Commission for Scheduled Castes) மற்றும் தேசிய அட்டவணை பழங்குடியினர் ஆணையம்(NCST- National Commission for Scheduled Tribes) மற்றும் பணியாளர் அமைச்சகம் (Ministry of Personal) ஆகியவற்றின் புகார் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி குறைவு பணியிடங்களுக்கான அறிவிப்பும் பொது அறிவிப்புடன் சேர்ந்து அறிவிப்பு செய்யப் பட்டது. இரண்டுக்குமான வி.ஏ.ஓ. தேர்வை டி.என்.பி.எஸ்.சி 20-2-2011 அன்று நடத்தியது. இத்தேர்வை 10 லட்சத்திற்கும் மேலானவர்கள் எழுதினர். இத்தேர்வுக்கான முடிவுகள் 19-7-2011 அன்று பொதுவான காலியிடமான 1576-க்கு மட்டுமே வெளியானது. இதனை கண்ட பல லட்சக்கணக்கான எஸ்.சி. எஸ்.டி மாணவர்கள் ரிசல்ட் வெளியாகாததைக் கண்டு பொது அறிவு உலகத்தை தொடர்பு கொண்டு மிகவும் வருத்தப்பட்டனர். டி.என்.பி.எஸ்.சி தேர்வை நடத்தி எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு மட்டும் தேர்வு முடிவு வெளியிடப்படாததன் காரணம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மாணவர்கள் மீது பொது அறிவு உலகம் கொண்ட அக்கறையின் வெளிபாடாக இந்த விவகாரத்தை டி.என்.பி.எஸ்.சி-க்கு எடுத்து சென்றோம். விசாரித்ததில், வி.ஏ.ஓ. தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு சில மாதங்களில் எஸ்.சி. & எஸ்.டி பிரிவினருக்கான குறைவு பணியிடங் களை தனியாக குறிப்பிட்ட இனத்தினருக்காக நிரப்பக் கூடாது என அதன் மீது தடைகோரி ஆர். சந்தோஷ்குமார் என்பவர் தமிழக அரசு செயலர் (R. Santhoshkumar vs the secretary to government) மீது ரிட் மனு ஒன்றை 2010-இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த ரிட் மனு எண்.19563 ஆகும். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசை (Counter Affidavit) ஒன்றை தாக்கல் செய்யுமாறும், அதனை டி.என்.பி. எஸ்.சி-க்கு அனுப்பி வைக்குமாறும் கூறியது. இந்த வழக்கில் டி.என்.பி.எஸ்.சி 4-வது சாட்சி யாகும். அதனால் இந்த வழக்கை டி.என்.பி.எஸ். சியும் நடத்த வேண்டிய அவசியமில்லை. இதற்கு வருவாய் செயலர் மற்றும் அரசு செயலர்தான் பொறுப்பு ஆவார்கள். இதற் கிடையில் மனுதாரர் ஆர். சந்தோஷ்குமார் மற்றுமொரு மனுவை (M.P. No.2) வை தாக்கல் செய்ய, "தேர்வை நடத்த எவ்வித தடையில்லை என்றும் ஆனால் வழக்கு முடியும் வரை எஸ்.சி & எஸ்.டி பிரிவு தேர்வு முடிவுகளை அறிவிக்கக் கூடாதெனவும்' உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இப்போதைக்கு இந்த அளவில் வழக்கு உள்ளது. இதில் தடையை அகற்றி தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டுமெனில் தமிழக அரசு இதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும். ஆனால் இதுவரை எதிர்வாக்கு மூலம் கூட தாக்கல் செய்யவில்லை தமிழக அரசு. அல்லது வி.ஏ.ஓ. தேர்வை எழுதிய எஸ்.சி. & எஸ்.டி மாணவர்கள் (பாதிக்கப்பட்டவர்கள்) இந்த வழக்கில் தங்களையும் ஒரு வாதியாக இணைத்துக் கொண்டு வழக்கை நடத்த வேண்டும். அப் போதுதான்தடை நீக்கப்பட்டு இந்த வி.ஏ.ஓ. ரிசல்ட் வெளியிடப்படும். இல்லையெனில் இந்த தேர்வு முடிவு வெளியிடப்படாமல் போக வாய்ப்பு உள்ளது.
குறைவு பணியிடங்கள் பற்றிய விளக்கம்
பொது அறிவு உலகம் எப்போது இடஒதுக்கீட்டுக்கு 100 சதவீதம் ஆதரவு அளிக்கும். அது BC, MBC, SC, ST என அனைவருக்குமான இடஒதுக்கீட்டை நிச்சயம் வழங்க வேண்டும் என்பதே பொது அறிவு உலகத்தின் விருப்பம். இன்று மத்திய, மாநில அரசுகள் திட்ட மிட்டே OBC (BC மற்றும் MBC) பிரிவினர் களுக்கான வேலைவாய்ப்பில் துரோகமிழைத்து வருகிறது. இதனால் பல ஆண்டுகளுக்கும் மேலாக குறைவு பணியிடங்களை நிரப்பாமல் ஏமாற்றி வருகின்றன. "2004-ஆம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள ஞஇஈ, நஈ, நப பிரிவினருக்கான 60,000 குறைவு பணியிடங்களை (Backlog Reserve Vacancies) நிரப்ப வேண்டுமென ஆணைப் பிறப்பித்தும் மேற்கண்ட பிரிவினரை பணியமர்த்தப் படவில்லை என பணியாளர் அமைச்சகம் வெளியிட்ட ஆணையில் (65067/2010) தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2007-ஆம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி 74,008 குறைவு பணியிடங்கள் (26, 358 நேரிடை தேர்வு மூலமாகவும் 47, 650 பதவி உயர்வு மூலமாகவும்) நிரப்படவில்லை என மத்திய பொது பணியாளர் அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. இது மத்திய, மாநில அரசுகள் அளித்து வரும் இடஒதுக்கீடு சமூக நீதிக்கு உதாரணம்.
புதிய அறிவிப்புகள்
டி.என்.பி.எஸ்.சி அலுவலக வட்டாரங்களில் கிடைத்த தகவலின்படி பின்வரும் தேர்வு களுக்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளி யிடப்பட உள்ளன. TNPSC குருப் IV தேர்வுக் கான அறிவிப்பு நவம்பர் மாதவாக்கில் வெளியாக வாய்ப்புள்ளது. இதற்கான காலியிடங்கள் ஏறக்குறைய மூவாயிரத்திற்கும் அதிகமாகும். தற்சமயம் டி.என்.பி.எஸ்.சி வசம் வெறும் 67 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே உள்ளன. அதனால் இவற்றை வைத்துக்கொண்டு எந்த ஒரு பெரிய தேர்வுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட முடியாது. எனவே விண்ணப் படிவங்களுக்காக அறிவிப்புகள் காலதாமதம் ஆகின்றன. அண்மையில்தான் விண்ணப் படிவங்களை அச்சிடுவதற்கு டெண்டர் விடப் பட்டுள்ளது. விண்ணப்பங்கள் தயாராகும் பொருத்து தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும்.
அடுத்து TNPSC குரூப் IV, VIII இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் (Tamilnadu Hindu Religious and Charitable Endowments Suboordinate Service) (EO) பணிக்கான தேர்வு பட்டப் படிப்பு தரம் மற்றும் 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதிக்கானவை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான காலியிடங்கள் ஏறக்குறைய 150-க்குள் இருக்கலாம்.
மேலும் தொடர்ந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் குரூப் I மற்றும் குரூப் II தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளிவரும்.
குரூப் II தேர்வு முடிவுகள்
டி.என்.பி.எஸ்.சி குரூப் 11 தேர்வுக்கான முடிவுகள் அனைத்தும் தயார் செய்தாகி விட்டது. தமிழக அரசு தமக்கு தேவையான பணியிடங்களை அதிகரிக்க பரிசீலனை செய்துவருவதால், தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் காலதாமதமாகிறது. இந்த விவரம் கிடைக்கபெற்றவுடன் விரைவில் குரூப் ஒஒ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.