நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

தமிழக பட்ஜெட்டில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவது பற்றிய அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. SDPI மாநிலத் தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி அறிக்கை


 SDPIயின் மாநிலத் தலைவர் இன்று (4.08.2011)வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

            தமிழக அரசு நேற்று(3.8.2011) சட்டசபையில் தாக்கல்செய்துள்ள 2011-12 ம் ஆண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையில் உலமா ஓய்வூதியம் உயர்த்தப்பட்டிருப்பதும் விவசாயம் மற்றும் அணைகள் பராமரிப்பிற்கு அதிக கவனம்செலுத்தப்பட்டிருப்பதும், ஏழைக்குடும்பங்களுக்கு ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் இலவசமாக வழங்குவது பற்றிய அறிவிப்பும், வரவேற்றகத்தக்கது, பாரட்டிற்குரியது. அதேசமயம் சமச்சீர் கல்வி பற்றி எதுவும் கூறாததும், விலை வாசியை கட்டுப்படுத்துவது பற்றிய அறிவிப்புகள் இல்லாததும், தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் வாக்குறுதியளித்தபடி முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவது பற்றிய அறிவிப்பு இல்லாததும், கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பில் பின் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கான நலத்திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் இல்லாததும் ஏமாற்றம் அளிக்கிறது.  இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.