ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நோன்பு திறக்கும் (இஃப்தார்) நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல இவ்வருடம் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி 7/8/2011 ஞாயிற்றுக் கிழமையன்று மாலை 5 மணிக்கு கோவை போத்தனூர் சாலையிலுள்ள பாரதி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை பாப்புலர் ஃப்ரண்ட் -ன் கோவை மாவட்ட செயலாளர் M.முஸ்தபா அவர்கள் வரவேற்றுப் பேசினார். பாப்புலர் ஃப்ரண்ட் -ன் கோவை மாவட்ட தலைவர் K.ராஜா உசேன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலப் பேச்சாளர் மௌலவி M.மெஹபூப் அன்சாரி பைஜி அவர்கள் சிறப்புரையாற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட் -ன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் M.I.அப்துல் ஹக்கீம் அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்து கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
அதன்பிறகு நடைபெற்ற இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் சுமார் 1500 சகோதரர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக "பாப்புலர் ஃப்ரண்ட் -ன் சமூகப் பணிகள்" காணொளி திரையிடப்பட்டது.
மேலும் புகைப்படங்கள்