நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

குவைத்:வெளிநாட்டினர் போராட்டத்தில் பங்கேற்றால் சிறையும், அபராதமும்


குவைத்சிட்டி: குவைத்தில் ஏதேனும் பெயரில் நடைபெறும் போராட்டங்களில் குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் பங்கேற்றால் அவர்களுக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் காத்திருப்பதாக குவைத் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிரியா அரசு எதிர்ப்பாளர்களை அடக்கி ஒடுக்குவதை கண்டித்து குவைத்தில் அதிகரித்துவரும் போராட்டங்களில் வெளிநாட்டினர் பங்கேற்பதாக வெளியான தகவலையடுத்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இரண்டு வருடம் சிறைத்தண்டனை, குறைந்தது 100 தினார் அபராதமும் விதிக்கப்படும். அபராதம் 2000 தினார் வரையும் விதிக்கப்படும். இத்தகைய போராட்டங்கள் சர்வதேச அளவில் கடைப்பிடிக்கப்படும் ஜெனீவா ஒப்பந்தத்திற்கு எதிரானது எனவும் ஆதலால் கடினமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குவைத் உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதர நாடுகளின் தூதரகங்களை பாதுகாப்பது குவைத்தின் கடமையாகும் என தெரிவித்த உள்துறை அமைச்சகம் நாட்டின் சட்டங்களை பின்பற்றுவது வெளிநாட்டினர் மீது கடமை என தெரிவித்துள்ளது.