நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

படிக்க மறந்த கடைசிப் பாடம்


Ø இப்பாடத்தில் முதல்கோணல் முற்றும் கோணலல்ல! முடிவுக்கோணலே முழுகோணல்!
Ø இத்தேர்வில் தவறியோர் மறுதேர்வு எழுத அணுமதியில்லை
Ø மறு நுழைவுக்கும் வழியும் இல்லை , கை பிசைந்து நிற்கும் அவலநிலை.





வாழ்க்கையின் வெளிச்சத்திலிருந்தவர்களுக்கு வாழ்க்கையே இருட்டாகி போன நிலை,உதவியற்ற உதவாக்கரை நிலை , நிலைதடுமாறிப்போன நிலை, நிலையென்று நினைத்தமைக்காக நித்தம் வருந்துகின்ற நிலை.
Ø இந்த இழிநிலைபற்றி யாரும் சொல்லவில்லையே என அங்கலாய்க்க முடியாத நிலை , வருத்தப்பட்டும் தவிர்க்க வழியில்லா நிலை , மேலும் வருத்தப்பட்டும் ‘’முடிவு’’ தேடமுடியா நிலை , மொத்தத்தில் எந்தவழியும் இல்லாநிலை
Ø இழிநிலை , இந்நிலை.?
Ø நிலைதடுமாறியோருக்கு கண்டிப்பாக வரும் நிலை என்னதான் செய்வது? செய்யலாமே நிறைய.......
Ø தற்போதைய உன்வாழ்க்கைதான் மறு[மை]வாழ்வுக்கு மருந்து , பரிகாரம், பலன் , முன் ஜாக்கிரதை , படிப்பு , பாடம் எல்லாம். ஆம் அனைத்தும் குர்ஆனில் சொல்லப்பட்டதுதானே எங்கே சென்று இருந்தாய் நீ மறந்தாய்  மறக்கப்படுகிறாய் , மறுத்தாய் மறுக்கப்படுகிறாய் படித்த கட்டுரைகளுடன் குர் ஆன் வசனத்தை ஒப்பிட்டு பார் வாழ்க்கை பாடத்தில் வழுக்கிவிழுந்தவர்கள் மகிழ்ச்சியைதேடி அதை தொலைத்தவர்கள் பலனென்று எண்ணி படுகுழியில் விழுந்தவர்கள் உதவி செய்ய ஆளிருந்தும் உதவி பெறமுடியாதவர்கள் மொத்தத்தில் தப்புக்கணக்கு போட்டவர்கள் உன் குரல் கூட கூப்பாடாய் அல்லவா மொழியப்படுகிறது.
Ø காலம் கடந்த ஞானம் இறைவனிடம் இப்போதாவது வேண்டிக் கொள்!
               தேர்வாக வழி பிறக்கும்... இறைவன் நாடினால்???