நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 10 ஆகஸ்ட், 2011

அடக்கு முறைக்கு அஞ்சாத அபூதர் அல் கிப்பாரி (ரலி) அவர்கள்.



அபுதர் அல் கிப்பாரி (ரலி) அவர்களின் வாழ்க்கையையும் அதில் நாம் பெற வேண்டிய படிப்பினைகளையும் அறிவோம்.அபுதர் அல் கிப்பாரி (ரலி) பற்றி ஓர் அறிமுகம்பெயர் : ஜுன்துப் இப்னு ஜுனாதாத் இப்னு சுப்யான் இப்னு உபைத் இப்னு ஹராம் இப்னு கிப்பார் இப்னு முலைல் இப்னு லம்hரா இப்னு பக்ர் இப்னு அப்து மனாத் இப்னு கினானா என்பதாகும்.
இவரது புனைப் பெயர் அபு தர் என்பதாகும்.மேலும் இவர் அல் கிப்பார் குலத்தைச் சேர்ந்தவர் ஆவார். தந்தையின் பெயர் :
ஜுனாதாத் இப்னு சுப்யான்தாயின் பெயர் : ரம்லத் பின்து வகீஆ ரலி அவர்கள்மனைவியின் பெயர் : உம்மு தர் ரலி அவர்கள் சகோதரரின் பெயர் :உனைஸ் இப்னு ஜுனாதா ரலி அவர்கள்ஆதாரம் :அஹ்மத் .சீரத்து அஃலாமுன் நுபலா.


இஸ்லாத்தை தழுவிய அபுதர்ரும் குடும்பத்தாரும்.இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்காக வேண்டி தனது ஊரிலிருந்து மக்கா நகரிற்கு வந்து சில நாட்கள் அங்கு தங்கியிருந்தார்கள்.பிறகு இரகசியமாக முஹம்மது நபி அவர்கள் இருக்கும் இடத்தை விசாரித்து அங்கு சென்று இஸ்லாத்தை தழுவினார்கள்.அபுதர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை தழுவிய போது மக்காவில் யாராவது இஸ்லாத்தை தழுவியதாக கூறினால் உடனே விசாரனையில்லாமல் அடிக்கக்கூடியவர்களாக மக்கத்துக் காபிர்கள் இருந்தார்கள்.அப்படியான நிலை இருந்தும் இஸ்லாத்தை தழுவியவுடனே பகிரங்கமாக இஸ்லாத்தை வெளிப்படுத்திய ஒரு உண்மைக் கொள்கைவாதியாவார். இதைப் பின் வரும் ஹதீஸ் சொல்கிறது.
அபூ ஜம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:எங்களிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அபூதர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய விதம் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று கேட்க, நாங்கள் சரி (அறிவியுங்கள்)என்றோம். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அப+தர் (ரலி) அவர்கள் (என்னிடம்) சொன்னார்கள்: நான் கிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாக இருந்தேன். அப்போது ஒரு மனிதர் தம்மை நபி என்று வாதிட்டபடி மக்கா நகரில் புறப்பட்டிருக்கிறார்என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. ஆகவே நான் என் சகோதரர்(அனீஸ்)இடம், “நீ இந்த மனிதரிடம் போய்ப் பேசி அவரது செய்தியை (அறிந்து) என்னிடம் கொண்டு  வாஎன்று  சொன்னேன். அவ்வாறே அவர் சென்று அவரைச் சந்தித்துப் பிறகு திரும்பி வந்தார். நான், “உன்னிடம்  என்ன செய்தி உண்டு?”  என்று கேட்டேன். நன்மை புரியும்படி கட்டளையிடவும் தீமையிலிருந்து (மக்களைத்) தடுக்கவும் செய்கின்ற ஒரு மனிதராக நான் அவரைக் கண்டேன்என்றார். நான் அவரிடம், “போதிய செய்தியை எனக்கு நீ கொண்டுவரவில்லைஎன்று கூறினேன். பிறகு தோலினால் ஆன (தண்ணீர்ப்)பையையும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு மக்காவை நோக்கிச் சென்றேன்.அவரை நான் (தேடி வந்திருப்பதாகக்) காட்டிக் கொள்ளாமலிருக்கத் தொடங்கினேன். அவரைப் பற்றி விசாரிக்கவும் நான் விரும்ப வில்லை. (வேறு உணவு இல்லாததால்) ஸம்ஸம் தண்ணீரைக் குடித்துக் கொண்டு இறையில்லத்தில் (தங்கி) இருந்தேன். அப்போது அலீ (ரலி) அவர்கள் (கஅபாவில்) என்னைக் கடந்து சென்றார்கள். (என்னைக் கண்டதும்), “ஆள் (ஊருக்குப்) புதியவர் போலத் தெரிகிறதேஎன்று கேட்டார்கள். நான், “ஆம்என்றேன். உடனே அவர்கள், “அப்படியென்றால் (நம்) வீட்டிற்கு நடங்கள் (போகலாம்)என்று சொன்னார்கள். நான் அவர்களுடன் எதைப் பற்றியும் கேட்காமலும்  (எதையும்) அவர்களுக்குத் தெரிவிக்காமலும் சென்றேன். காலையானதும் நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்க இறையில்லத்திற்குச் சென்றேன். ஆனால், (அங்கு) ஒருவரும் அவர்களைப் பற்றி எதையும் எனக்குத் தெரிவிக்கவில்லை. அப்போது அலீ (ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். மனிதர் (தான் தங்க வேண்டியுள்ள) தன் வீட்டை அடையாளம் தெரிந்து கொள்ளும் நேரம் இன்னும் வரவில்லையா?” என்று (சாடையாகக்) கேட்டார்கள். நான், “இல்லைஎன்றேன். உடனே அலீ (ரலி) அவர்கள், “என்னுடன் நடங்கள்என்று சொல்லிவிட்டு, “உங்கள் விவகாரம் என்ன? இந்த ஊருக்கு எதற்காக வந்தீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு, “நான் சொல்வதைப் பிறருக்குத் தெரியாமல் நீங்கள் மறைப்பதாயிருந்தால் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்என்று நான் சொன்னேன். அதற்கு அவர்கள், “அவ்வாறே செய்கிறேன்என்று சொன்னார்கள். நான் அப்போது இங்கே தம்மை இறைத் தூதர் என்று வாதிட்டபடி ஒரு மனிதர் புறப்பட்டிருக்கிறார்என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. ஆகவே, நான் என் சகோதரரை அவரிடம் பேசும்படி அனுப்பினேன். போதிய பதிலை என்னிடம் அவர் கொண்டு வரவில்லை. ஆகவே, நான் அவரை (நேரடியாகச்) சந்திக்க விரும்பினேன்என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “நீங்கள் நேரான வழியை அடைந்துள்ளீர்கள். இது நான் அவரிடம் செல்லும் நேரம். ஆகவே என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள். நான் நுழையும் வீட்டில் நீங்கள் நுழையுங்கள். ஏனெனில்,  (என்னுடன் வருவதால்) இவனால் உங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று நான் அஞ்சுகின்ற ஒருவனைக் காண்பேனாயின், என் செருப்பைச் சரி செய்பவனைப் போல் சுவரோரமாக நான் நின்று கொள்வேன். நீங்கள் போய்க் கொண்டிருங்கள்என்று சொன்னார்கள். இறுதியில் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல, நானும் அவர்களுடன் உள்ளே சென்றேன். நான் நபி (ஸல்) அவர்களிடம், “எனக்கு இஸ்லாத்தை எடுத்துரையுங்கள்என்று சொன்னேன். அவர்கள் அதை எடுத்துரைத்தார்கள். நான் இருந்த அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அப+தர்ரே! (நீ இஸ்லாத்தை  ஏற்ற) இந்த விஷயத்தை மறைத்து வை. உன் ஊருக்குத் திரும்பிச் செல். நாங்கள் மேலோங்கி விட்ட செய்தி உனக்கு எட்டும் போது எங்களை நோக்கி வாஎன்று சொன்னார்கள். அதற்கு நான், “உங்களை சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் இதை (ஏகத்துவக் கொள்கையை) அவர்களுக் கிடையே உரக்கச் சொல்வேன்என்று சொல்லிவிட்டு, இறையில்லத்திற்கு வந்தேன். அப்போது குறைஷிகள் அங்கே இருந்தனர். நான், “குறைஷிக் குலத்தாரே! அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லைஎன்று நான் உறுதி கூறுகின்றேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்என்றும் நான் உறுதி கூறுகின்றேன்என்று சொன்னேன். உடனே, அவர்கள் இந்த மதம் மாறி(ய துரோகி)யை எழுந்து சென்று கவனியுங்கள்என்று சொன்னார்கள். அவர்கள் எழுந்து வந்தார்கள். என் உயிர் போவது போல் நான் அடிக்கப்பட்டேன். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னை அடையாளம் புரிந்துகொண்டு என் மீது கவிழ்ந்து (அடிபடாமல் பார்த்துக்) கொண்டார்கள். பிறகு குறைஷிகளை நோக்கி, “உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! கிஃபார் குலத்தைச் சேர்ந்த மனிதரையா நீங்கள் கொல்கிறீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யுமிடமும் நீங்கள் (வாணிபத்திற்காகக்) கடந்து செல்ல வேண்டிய பாதையும் கிஃபார் குலத்தவர் வசிக்குமிடத்தையொட்டித் தானே உள்ளது! (அவர்கள் பழிவாங்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?) என்று கேட்டார்கள். உடனே அவர்கள் என்னை விட்டு விலகிவிட்டார்கள். மறு நாள் காலை வந்தவுடன் நான் திரும்பிச் சென்று நேற்று சொன்னதைப் போலவே சொன்னேன். அவர்கள், “இந்த மதம் மாறி(ய துரோகி)யை எழுந்து சென்று கவனியுங்கள்என்று சொன்னார்கள். நேற்று என்னிடம் நடந்து கொண்டதைப் போலவே நடந்து கொண் டார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னைப் புரிந்து கொண்டு என் மீது கவிழ்ந்து (அடி படாதவாறு பார்த்துக்) கொண்டார்கள். நேற்று அப்பாஸ் அவர்கள் சொன்னதைப் போலவே (அன்றும்) சொன்னார்கள் -இதை அறிவித்த பிறகு- இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இது அப+தர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய ஆரம்பக் காலத்தில் நடந்த நிகழ்ச்சியாகும். அல்லாஹ் அப+தருக்கு கருணை காட்டுவானாக!என்று சொன்னார்கள்.
(நூல் : புகாரி – 3522.)
அபுதர் ரலி அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது மட்டுமல்லாமல் தனது குடும்பத்தாருக்கும் ஊராருக்கும்  இஸ்லாத்தைப் பற்றிக் கூறி அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.என்பதை பின் வரும் நபி மொழி கூறுகின்றது.
நான் (என் சகோதரர்) உனைஸிடம் திரும்பிச் சென்றேன். அப்போது உனைஸ் நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்று கேட்டார். நான் இஸ்லாத்தை ஏற்று, (அதை) உண்மையென நம்பினேன்என்று கூறினேன். உனைஸ், “(நீங்கள் ஏற்றுள்ள) உமது மார்க்கத்தைப் புறக்கணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நானும் இஸ்லாத்தை ஏற்று, (அதை) உண்மையென நம்புகிறேன்என்று கூறினார்.பிறகு நாங்கள் எங்கள் தாயாரிடம் சென்றோம். (நாங்கள் இஸ்லாத்தைத் தழுவிய விவரத்தைக் கூறினோம்.) அப்போது என் தாயார், “(நீங்கள் இருவரும் ஏற்றுள்ள) உங்கள் மார்க்கத்தைப் புறக் கணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நானும் இஸ்லாத்தைத் தழுவி, (அதை) உண்மையென நம்புகிறேன்என்று கூறினார்.பிறகு நாங்கள் எங்கள் வாகனத்தில் ஏறி எங்கள் கிஃபார்குலத்தாரைச் சென்றடைந்தோம். அவர்களில் பாதிப்பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு அய்மா பின் ரஹளா அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் முன்னின்று தொழுகை நடத்தினார்@ அவரே அம்மக்களுக்குத் தலைவராக இருந்தார்.ஃகிஃபார் குலத்தாரில் இன்னும் பாதிப்பேர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வரும்போது நாங்கள் இஸ்லாத்தை ஏற்போம்என்று கூறினர். அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, எஞ்சியிருந்த பாதிப்பேரும் இஸ்லாத்தை ஏற்றனர்.அஸ்லம்குலத்தார் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) சென்று, “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் சகோதரக் குலத்தார் எந்த அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண் டார்களோ அதே அடிப்படையில் நாங்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோம்என்று கூறினர்.அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(பெயருக்கேற்பவே) ஃகிஃபார்குலத்தாரை அல்லாஹ் மன்னித்துவிட்டான் அஸ்லம்குலத்தாரைப் பாதுகாப்புப் பெற்ற வர்களாக ஆக்கிவிட்டான்என்று கூறினார்கள்.
(நூல் : முஸ்லிம் – 4878.)
நபிகளாரின் உபதேசத்தை பெற்ற நபித் தோழர்நபித் தோழர்கள் தவறு செய்யும் போது நபிகளாரின்  உபதேசத்தைப் பெற்ற நபித் தோழர்கள் ஏராளம் இருக்கின்றனர்.அவ்வாறு நபிகளாரின் உபதேசத்தைப் பெற்றவர் தான் அபுதர் (ரலி) அவர்கள்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபுதர் (ரலி) அவர்களுக்கு தான் விரும்புவதையே  தனக்கும் விரும்புகிறேன் என்கின்ற அளவிற்கு உபதேசம் செய்ததை பின் வரும் நபி மொழிகள் கூறுகின்றது.
அபூதர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:நான் (நபி (ஸல்) அவர்களிடம்) அல்லாஹ் வின் தூதரே! எனக்கு ஏதேனும் பதவி வழங்கக் கூடாதா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், தமது கையால் எனது தோள்மீது அடித்துவிட்டு, “அபூதர்! நீர் பலவீனமானவர். அது ஒரு அமானத் ஆகும். அதை முறைப்படி அடைந்து, அதில் தமக்குரிய பொறுப்புகளை நிறை வேற்றியவரைத் தவிர மற்றவர்களுக்கு அது (மறுமையில்) இழிவும் துயரமும் ஆகும்என்று கூறினார்கள்.
(நூல் : முஸ்லிம் – 3729.)
அபூதர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “அபூதர்! உம்மை நான் பலவீன மானவராகவே காண்கிறேன். எனக்கு நான் விரும்புவதையே உமக்கும் விரும்புகிறேன். இருவருக்குக்கூட நீர் தலைமை ஏற்காதீர். அநாதையின் சொத்துக்கு நீர் பொறுப்பேற்காதீர்என்று சொன்னார்கள்.
(நூல் : முஸ்லிம் – 3730)
நிறைவான மார்க்க அறிவு பெற்றவர்.அபுதர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு இருந்து மார்க்க விசயங்களைப் பற்றி அதிகமாக கேள்வி கேட்டு தெரிந்து கொண்டார்கள்.இதற்கு ஏராளமான நபி மொழிகள் இருக்கின்றன.ஆகவே இவைகளை படிப்பதோடு நிறுத்திவிடாமல் நாமும் மார்க்க விசயங்களை அதிகமாக அறிந்து அபுதர் அவர்களைப் போன்று நிறைவான மார்க்கமுடையவராவோம்.
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “(அவனைச் சுற்றிலும் இருப்பது) ஒளியாயிற்றே! நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?” என்று கேட்டார்கள்
(நூல் : முஸ்லிம் – 291.)
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவதுநான் நபி (ஸல்) அவர்களிடம், “எந்த நற்செயல் சிறந்தது? என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஈமான் (நம்பிக்கை) கொள்வதும் அவனது பாதையில் ஜிஹாத் செய்வதும் ஆகும்என்று பதிலளித்தார்கள்.  நான், “எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், “அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும்  (தான் சிறந்தவர்கள்)என்று பதிலளித்தார்கள்.  நான், “என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது) இயலவில்லையென்றால்?” என்று கேட்டேன்.  நபி (ஸல்) அவர்கள் பல வீனருக்கு உதவி செய் அல்லது உழைத்துச் சம்பாதிக்க இயலாதவனுக்கு நன்மை செய்என்று கூறினார்கள்.  நான் இதுவும் என்னால் இயலவில்லை யென்றால்….?” என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், “மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்கு செய்து கொள்ளும் ஒரு தர்மம் ஆகும்என்று கூறினார்கள்.நூல் : புகாரி – 2518.அப+தர் (ரலி) அவர்கள் கூறியதாவதுநான் (நபி ஸல் அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! ப+மியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பளளி;வாசல் எது? என்று கேட்டேன். அவர்கள், “அல் மஸ்ஜிதுல் ஹராம்-மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்என்று பதிலளித்தார்கள். நான், “பிறகு எது?” என்று கேட்டேன். அவர்கள், “(ஜெரூஸலத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸாஎன்று பதிலளித்தார்கள். நான், “அவ்விரண்டுக்கு மிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடை வெளி) இருந்ததுஎன்று கேட்டேன். அவர்கள், “நாற்பதாண்டுகள்” (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப் பட்டது) பிறகு, “நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில்தான் சிறப்பு உள்ளதுஎன்று சொன்னார்கள்.
(நூல் : புகாரி – 3366)