நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 31 ஆகஸ்ட், 2013

மாலேகான்: ஒன்பது முஸ்லிம் இளைஞர்கள் விடுவிக்கப்படுகின்றார்கள்!




மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 முஸ்லிம்களை அவ்வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.


மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் 2006 செப்டம்பர் 8ஆம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நூருல் ஹுதா சம்சுதா (28), ஷப்பிர் அகமது மஸியுல்லா (41), ரயீஸ் அஹ்மது ரஜாப் அலி மன்சூரி (35), டாக்டர் ஸல்மான் பார்சி அப்துல் லத்தீப் அய்மி (40), டாக்டர் பரோக் இக்பால் அஹ்மது மக்துமி (38), முஹம்மது அலி ஆலம் ஷேக் (42), ஜுனைத் (35), முஹம்மது ஜாகித் அப்துல் மஜீத் அன்சாரி (31), அப்ரர் அஹ்மது குலாம் அஹ்மது (38) ஆகியோரை மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்புப் படையினர் கைது செய்தனர். அதன் பிறகு இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இவர்கள் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 9 பேரும் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி மனு செய்தனர். இதை ஏற்ற நீதிமன்றம் 9 பேரையும் ஜாமீனில் விடுவித்தது. அதன் பின், 9 பேரும் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி தேசிய புலனாய்வு அமைப்புக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், 9 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே, நீதிமன்றம் உரிய உத்தரவைப் பிறப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மீதான தீர்ப்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்புக்கு வந்தபோது மாலேகான் குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக லோகேஷ் சர்மா, தனசிங், மனோகர் சிங், மற்றும் ராஜேந்திர சவுத்ரி ஆகியோரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். இவர்கள் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாலேகானில் 2008-ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சாத்வி பிரக்யா சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.