ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு உள்ளாகும் எகிப்திய
மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா டெல்லி
ஜந்தர் மந்தரில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தியது. மனித உரிமை
ஆர்வலர்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கான மக்கள்
இப்போராட்டத்தில் பங்கேற்றனர். நேற்று(30/08/2013) மாலை 3 மணியளவில் ஜந்தர்
மந்தரில் எகிப்திய மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் மாநாட்டுடன் நிகழ்ச்சி
துவங்கியது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷெரீஃப் மாநாட்டை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார்.அவர் தனது உரையில்:
ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எகிப்திய அதிபர் முஹம்மது முர்ஸியை அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து கவிழ்த்துள்ளன. மக்களிடம் அதிகாரம் செல்வதை கண்டு அஞ்சுபவர்கள், இந்த ராணுவ புரட்சிக்கு துணை நின்றனர். அதிகாரம் மக்களிடம் சென்றால், எகிப்தின் வளங்களை கொள்ளையடிக்கும் அமெரிக்காவின் திட்டம் தவிடுபொடியாகும். இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியா, இந்த ராணுவ நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்பவேண்டும். எகிப்தில் மீண்டும் முர்ஸியை பதவியில் அமர்த்துவதற்கும், ஜனநாயகம் மீண்டும் எகிப்தில் மலரவு இந்தியா ராஜதந்திர ரீதியாக அழுத்தம் கொடுக்கவேண்டும். இவ்வாறு கே.எம்.ஷெரீஃப் தனது உரையில் கூறினார்.
கவ்மி ஸலாமத்தி பத்திரிகையின் முதன்மை எடிட்டர் முஹம்மது அஹ்மத் காஸ்மி தனது உரையில் கூறியது:
எகிப்தில் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் தியாகம் வீண் போகாது. பாதிக்கப்பட்ட மக்களுடன் சேராத நடுநிலையை சர்வதேச சமூகம் கைவிட வேண்டும் என்றார் அவர்.
லோக் ராஜ் என்ற அமைப்பின் பிரதிநிதி பிர்ஜு நாயிக் தனது உரையில் கூறியது:
அமெரிக்காவை ஆதரிப்பவர்கள் ஜனநாயகவாதிகளாகவும், சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகளாகவும் முத்திரைக்குத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணை தலைவர் பேராசிரியர் பி.கோயா தனது உரையில் கூறியது:
செயல் அளவில் மிகவும் வலிமையாக மாறி வரும் முர்ஸியின் அரசை ஒழிப்பது இஸ்ரேலுக்கு தேவை. எகிப்தில் நடந்தது போல ஜனநாயக புரட்சி தங்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவிடும் என்று இதர அரபு நாடுகள் அஞ்சுகின்றன என்றார் கோயா.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் தேசிய தலைவர் உஸ்மான் பேக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் ஒ.எம்.அப்துல் ஸலாம், எஸ்.டி.பி.ஐயின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஷரஃபுத்தீன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் இனாமுர் ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினர்.