நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 31 ஆகஸ்ட், 2013

தன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி நாடகம் ஆடிய பா.ஜ.க பிரமுகர்கள் கைது!


திண்டுக்கல்லில் பா.ஜனதா கட்சியின் கிளை தலைவர் பிரவீன்குமார் வீட்டில் சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நாடகம் என போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவும், அரசியல் விளம்பரத்திற்காகவும் அவரும் அவரது நண்பரும் நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பிரவீன் குமாரும் அவரது நண்பர் கமலக்கண்ணனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுக்குறித்து போலீஸார் தெரிவிக்கையில்; ‘திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெரு பா.ஜ., கிளை தலைவராக பிரவீன்குமார் செயல்பட்டு வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் தனது வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியதாக, போலீசில் புகார் செய்தார்.
பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக, பிரவீன்குமார் நண்பர் கமலக்கண்ணனிடம் விசாரித்தோம். அவரும், பிரவீன்குமாரும் சம்பவத்தன்று மது குடித்துள்ளனர். இருவரும் சேர்ந்து மதுபாட்டிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, பிரவீன் வீட்டின் மீது வீசி விட்டு தப்பினர். பின்பு ஒன்றும் தெரியாதவர்கள் போல நாடகமாடி, போலீசாருக்கு பிரவீன் தகவல் தெரிவித்துள்ளார்.
தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும், கட்சியில் விளம்பரம் வேண்டும் என்பதற்காக, அவர் நாடகமாடியுள்ளார். இவர்களது மொபைல் போன் பேச்சுகளை வைத்து, இதை கண்டுபிடித்தோம்.’ என்றார்.
கடந்த மாதம் இதேப்போன்று கோவையில் போலீஸ் பாதுகாப்புக்காக அனுமன் சேனா தலைவர் கடத்தல் நாடகமாடி கைதான நிகழ்வு குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அதே திண்டுக்கல் நகரில் தமுமுக கிளைத் தலைவர் ஒருவர் வீட்டின் மீதும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.