நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

தொடர் குண்டுவெடிப்பிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம்

ஹைதராபாத் நகரில் நேற்றைய தினம் (21.02.2013) நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 15 அப்பாவிகள் பலியாகினர்.  83 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இக்குண்டுவெடிப்பிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது .

இறந்த பதினைந்து அப்பாவிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் , காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் . இதைப் போன்ற தாக்குதல்கள் மக்களிடையே அமைதியின்மையையும் ,நல்லிணக்கத்தையும் குலைக்கின்றன. இத்தருணத்தில் எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டு தீய சக்திகளின் சதிகளை முறியடிக்க வேண்டும் .

பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய "திரைத்துறை - ஒரு சமூகப் பார்வை"

தமிழ் திரைப்படத் துறையில் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரங்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. 
அண்மையில் வெளியான கமலஹாசனின் விஸ்வரூபம் உலக மக்களுக்கு நல்லுபதேசமான இறை வேதம் திருக்குர்ஆன் மற்றும் முஸ்லிம்களின் வழிப்பாட்டு முறைகள் தீவிரவாதத்தை தூண்டுவதாக சித்தரித்தது.

வியாழன், 21 பிப்ரவரி, 2013

ஷிண்டேவின் முரண்பட்ட கருத்துகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்

மத்திய உள்துறை அமைச்சர் திரு.சுஷில் குமார் ஷிண்டே அவர்கள் பி.ஜே.பி குறித்து தான் வெளிப்படுத்திய கருத்துகளிலிருந்து பின்வாங்கும் விதமாக ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் “சிந்தன் சிபிர் கூட்டத் தொடரில்” கருத்துக்களை வெளியிட்டிருப்பதனை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது.

மாலேகான் தொடங்கி சம்ஜவ்தா குண்டுவெடிப்புகள் வரை நடத்தியவர்கள் குறித்த உண்மைகளை வெளியிடுவதற்கு இன்னும் பொருத்தமான வார்த்தைகளை வேண்டுமானால் பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் எத்தகைய வார்த்தைகளை பயன்படுத்தினாலும் நூற்றுக்கணக்கனோர் படுகாயமடைவதற்கும், கொல்லப்படுவதற்கும் காரணமான இக்கொடூரகுற்றங்களுக்கு பின்னால் ஹிந்துத்துவவாதிகளின் கைகள் இருப்பதனை மறைக்க இயலாது .

திங்கள், 18 பிப்ரவரி, 2013

பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்

டெல்லி :-  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக இந்தியா முழுவதும் “மக்களின் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தோடு "யூனிட்டி மார்ச்" என்ற பெயரில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது .        

அதன் அடிப்படையில் தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் கொடியேற்றுதல் , பேரணி மற்றும் வாகனப் பேரணி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம் - நெல்லை மேற்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சி

கடையநல்லூர்:- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ஆம் தேதியை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் தாம்பரம், திருச்சி மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் "யூனிட்டி மார்ச்" என்ற தலைப்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் தமிழகம் முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

புதன், 30 ஜனவரி, 2013

பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பியை தடை செய்! தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்!


சென்னை: நாட்டில் நடைபெறும் பயங்கரவாத செயல்களை கண்டித்தும், நாட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு காரணம் சங்க்பரிவார அமைப்புகள் தான் என்ற உள்துறை அமைச்சர் ஷிண்டேவின் கருத்தை ஆதரித்தும், சங்பரிவார அமைப்புகளை தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சென்னையில் நேற்று (ஜனரி-30)  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில  தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார்.

பிப்ரவரி 17 பாப்புலர் ஃப்ரண்ட் தினம்


வி‌ஸ்வரூப‌த்து‌க்கு ‌மீ‌ண்டு‌ம் தடை - ஐகோ‌ர்‌ட் அ‌திரடி

நடிக‌ர் கம‌ல்ஹா‌ச‌ன் நடி‌த்து‌ள்ள ‌வி‌‌ஸ்வரூப‌ம் பட‌த்து‌க்கு த‌‌மிழக அரசு ‌வி‌தி‌த்த தடையை ‌நீ‌க்‌‌கிய செ‌ன்னை உய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற த‌னி ‌நீ‌‌திப‌தி உ‌த்தரவு‌க்கு, உய‌ர் ‌நீ‌திம‌ன்ற முத‌ன்மை அம‌ர்வு தடை ‌வி‌தி‌த்து‌ள்ளது.


இ‌ஸ்லா‌மிய‌‌ர்க‌ளி‌ன் எ‌தி‌ர்‌ப்பை‌த் தொட‌ர்‌ந்து ‌வி‌ஸ்வரூப‌ம் ப‌ட‌த்து‌க்கு த‌மிழக அரசு தடை ‌வி‌தி‌த்தது. இ‌ந்த தடையை எ‌தி‌‌ர்‌த்து நடிக‌ர் கம‌ல்ஹாச‌ன், செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு தொட‌ர்‌ந்தா‌ர். இ‌ந்த வழ‌க்கை ‌விசா‌‌ரி‌த்த ‌நீ‌திப‌தி வெ‌ங்க‌ட்ரா‌ம‌ன், ‌வி‌ஸ்வரூப‌ம் பட‌த்து‌க்கு ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த தடையை ‌நீ‌க்‌கினா‌ர். இதை எ‌தி‌ர்‌த்து த‌மிழக அரசு உய‌ர் ‌நீ‌திம‌ன்ற முத‌ன்மை அம‌ர்வு மு‌ன்பு மே‌ல்முறை‌யீடு செ‌ய்தது.

செவ்வாய், 29 ஜனவரி, 2013

யாரு உண்மையான தீவிரவாதி?



எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல... 
ஆனால்
எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களே..!


- என்று கூறுகின்றன.


இன்று ஏகாத்திய நாடுகளின் ஊடங்களில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டும் இந்த நிலை 19ம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஏற்படுத்தப்பட்ட மாயை. ஏனெனில் 19ம் நூற்றாண்டுகளின் ஆவணச்சான்றுகளை ஆராய்ந்தால் எந்த ஒரு பயங்கவாத செயலும் முஸ்லிம்களால் நடத்தப்படவே இல்லை. அல்லது முஸ்லிம்கள் நடத்திய அப்படிப்பட்ட பயங்கரவாத செயல்கள் காண்பது அரிது.,
 

திங்கள், 28 ஜனவரி, 2013

முஸ்லிம்களின் உணர்வுகளை நடுநிலையோடு சீர்தூக்கிப்பார்க்க வேண்டும்!

கமல்ஹாசனின் "விஸ்வரூபம்" திரைப்படத்திற்கு முஸ்லிம்களின் எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு விதித்துள்ள தடை குறித்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், திரைப்படதுறையினரும் சமூக ஆர்வலர்களும் பல கருத்துக்களை வெளியிட்டனர். பல கருத்துக்கள் ஆதரவாகவும், சில கருத்துக்கள் எதிராகவும் வெளியிட்டனர்.
திரைப்படத்துறையில் கம்ல்ஹாசன் அவர்கல் பல்வேறு புதுமைகளையும், முற்போக்கு சிந்தனைகளையும் ஏற்படுத்திவரும் நிலையில், விஸ்வரூபம் போன்ற மத உணர்வுகளை புண்படுத்தும் திரைப்படம் தடைகளையும் பின்னடைவையும் ஏற்படுத்தும் என்பதை தெரிவிக்கின்றோம்.

வியாழன், 25 அக்டோபர், 2012

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் SDPI 50 தொகுதிகளில் தனித்து போட்டி

எஸ்.டி.பி.ஐ.யின் மத்திய பிரதேச பிரிவு எதிர் வரும் 2013 சட்டசபை தேர்தலில் சுமார் 50 தொகுதிகளில் போட்டியிடுகிறது.செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ.யின் மத்திய பிரதேச மாநிலத் தலைவரும், தேசிய துணைத் தலைவருமான வழக்கறிஞர் ஸாஜித் ஸித்தீக்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக மாநில செயற்குழு எடுத்த முடிவைத் தெரிவித்தார். கட்சியின் தேசிய செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் கான் செயற்குழுவுக்கு தலைமை வகித்தார். 

மாநிலத் தேர்தல் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தலைவராக தன்னை நியமித்துள்ளதாகவும் வழக்கறிஞர் ஸாஜித் ஸித்தீக்கி தெரிவித்தார். இந்தூரைச் சேர்ந்த முஹம்மத் சலீம் அன்சாரீ, அப்துர் ரவூஃப், குவாலியர் அப்துல் கனி, ஜபல்பூர் இர்ஃபானல் ஹக், தேவஸ் ஹஃபிஸ் ஷப்பீர் ஆகியோர் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். 

பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் ? - கர்நாடகா மாநிலம் குல்பர்காவில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டம்


கர்நாடகா : பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் ? என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கர்நாடகா மாநிலம் குல்பர்காவின் தேசிய கல்லூரியில் 19.10.2012 அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

மாவட்ட தலைவர் ஷாஹித் நஸீர்  வரவேற்புரை நிகழ்த்தினார்.மாநில துணை தலைவர் அப்துல் வாஹித் சேட் தலைமை உரை ஆற்றினார். அவர் தனது உரையில் " சிறுபான்மை மற்றும் ஏழை மக்களுக்கு பாப்புலர் ஃபிரண்ட் போராடி வருவதால் அது குறிவைக்கப்படுகிறது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சிமியின் மறு வடிவம் என்று கூறுபவர்கள் ஒரு விஷயத்தை சிந்திக்க மறந்து விட்டார்கள்.2001ல் தடை செய்யப்பட்ட சிமியின் மறுவடிவாக 1993ல் உருவாக்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எவ்வாறு இருக்க முடியும்? "என்று குறிப்பிட்டார்.

திங்கள், 22 அக்டோபர், 2012

குறி வைக்கப்படும் முஸ்லிம் சமூகம் !நீதிக்கான முழக்கம் - கோவை மண்டல மாநாடு : கோவை பகதூர்ஷா திடலில் திரண்ட மக்கள் வெள்ளம்

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவிற்கு எதிராக அதிகார மையங்கள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொண்டு வரும் அவதூறு, பொய்யான பரப்புரைகளின் போலித்தன்மையை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம் மக்களை சந்திப்போம் ! உண்மையை சொல்வோம் !! என்ற முழக்கத்தோடு " குறி வைக்கப்படும் முஸ்லிம் சமூகம் - நீதிக்கான முழக்கம் " என்ற தலைப்பில் கோவை மண்டல மாநாடு 21 .10 .2012 அன்று கோவையில் போத்தனூர் ரோடு - மைல்கல்லில் பகதூர்ஷா திடலில் வைத்து நடைபெற்றது.
இம்மாநாட்டில் பாப்புலர் ப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் , மாநில தலைவர் ஏ.எஸ் . இஸ்மாயீல் , எஸ்.டிபி.ஐ கட்சியின் மாநில பொது செயலாளர் முபாரக் , பி.யு.சி.எல் துணை தலைவர் க.குறிஞ்சி , ஆல் இந்தியா இமாமஸ் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி. மஹபூப் அன்சாரி பைஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா?

இந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்?இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்?இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி?முஸ்லிம்கள் ஹிந்துகளாக கட்டய மத மாற்றம்?இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சிதானே காரணம்?முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகளா?



சனி, 20 அக்டோபர், 2012

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா?

இந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்?இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்?இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி?முஸ்லிம்கள் ஹிந்துகளாக கட்டய மத மாற்றம்?இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சிதானே காரணம்?முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகளா?



முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா?




இந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்?இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்?இந்துக்களாக இருந்தவர்மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி?முஸ்லிம்கள் ஹிந்துகளாக கட்டய மத மாற்றம்?இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சிதானே காரணம்?முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகளா?

வெள்ளி, 19 அக்டோபர், 2012

பாப்புலர் ப்ரண்ட் ஏன் ? சம நீதி மாநாடு - கேரளா மாநிலம் கொச்சியில் திரண்ட மக்கள் வெள்ளம்

கேரளா : பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கேரளா மாநிலம் கொச்சியில் 18.10 .2012 அன்று நடத்திய சம நீதி மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவை குறித்து அவதொர்று பரப்புபவர்களுக்கு இம்மக்கள் வெள்ளம் தகுந்ததொரு பாடமாக அமைந்தது. மக்களின் உரிமைகளுக்காக போராடி வரும் எந்தவொரு இயக்கத்தையும் தவறான பிரச்சாரங்கள் மூலம் தடுத்து விட முடியாது என்பதை இம்மாநாடு தெளிவுப்படுத்தியது. தேச விரோத சக்திகளுக்கு தகுந்ததொரு எச்சரிக்கையையும் இம்மாநாடு விடுத்துள்ளது. 
மாநாடு நடைபெற்ற மெரைன் டிரைவ் பகுதிக்கு காலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர். மக்கள் எழுப்பிய கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் மாநாடு

கோவை மண்டல மாநாடு குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாப்புலர் ப்ரண்டின் மாநில தலைவர் இஸ்மாயீல் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை

கோவை (அக்டோபர் 19 , 2012) : பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவிற்கு எதிராக அதிகார மையங்கள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொண்டு வரும் அவதூறு, பொய்யான பரப்புரைகளின் போலித்தன்மையை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம் " குறி வைக்கப்படும் முஸ்லிம் சமூகம் - நீதிக்கான முழக்கம் " என்ற தலைப்பில் கோவை மண்டல மாநாடு நடைபெறுகின்றது . மக்களை சந்திப்போம் ! உண்மையை சொல்வோம் !! என்ற முழக்கத்தோடு இம்மாநாடு நடைபெறும்.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா ஒடுக்கப்பட்ட சமூகங்களை கல்வி, சமூக மேம்பாடு என அனைத்து தளங்களிலும் சக்திப்படுத்த ஜனநாயக வழிமுறைகளில் போராடும் தேசிய அளவிலான ஒரு மக்கள் பேரியக்கமாகும். ஒடுக்கப்பட்ட சமூகங்கள் சக்திபெறுவதை விரும்பாத ஆதிக்க சக்திகள் பாப்புலர் ப்ரண்டிற்கு எதிராக பல அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.

புதன், 17 அக்டோபர், 2012

குறிவைக்கப்படும் முஸ்லிம்கள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை மக்களுக்கு அறிமுகம் செய்யவும் இயக்கம் குறித்து செய்யப்பட்டு வரும் அவதூறுகளை களைவதற்கும் ஒரு மாத தேசிய அளவிலான பிரச்சாரம் அக்டோபர் 10 முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடங்கியது. இந்த பிரச்சாரத்தின் போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குழு மக்களை அவர்களின் இல்லங்களுக்கு சென்று நேரடியாக சந்திக்கும். ஆங்கிலம், இந்தி, உருது, பெங்காளி, மணிப்பூர், மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் மலயாளம் ஆகிய மொழிகளில் சுவரொட்டிகளும் பிற பிரச்சார சாதனங்களும் விநியோகம் செய்யப்படும். பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில குழுக்கள் வாகன பிரச்சாரம் மற்றும் தெருமுனை கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளன. இதன் மூலம் பத்து இலட்சம் நகரங்கள் மற்றும் கிராமங்களை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
சமநீதி மாநாடுகள் கேரளாவின் திருவனந்தபுரம், கொச்சி மற்றும் கோழிக்கோட்டில் நடத்தப்படும். தமிழகத்தில் சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் மாநாடுகள் நடத்தப்படும். கர்நாடகாவில் பெங்களூர், குல்பர்கா, மைசூர் மற்றும் மங்களூர் நகரங்களில் மக்கள் மாநாடுகள் நடத்தப்படும். ஆந்திராவின் குர்னூலில் மாநில மாநாடும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தேசிய ஒற்றுமை மாநாடும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இது போன்ற பெரும் நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டின் நிறைவை குறிக்கும் விதமாக பல்வேறு மாநிலங்களின் சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொள்ளும் மக்கள் ஆதரவு மாநாடு தலைநகர் டெல்லியில் வைத்து நடைபெறும்.

திங்கள், 15 அக்டோபர், 2012

புளியங்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்-பொதுக்கூட்டம்!


புளியங்குடி: நெல்லை மேற்கு மாவட்டத்தின் சார்பாக புளியங்குடியில் வைத்து ஏன் பாப்புலர் ஃப்ரண்ட்? துவக்க நாள் பொதுக்க்கூட்டம் 14 - 10 - 12 ஞாயிற்றுக்கிழமை அன்று 6.45 மணியளவில் நடை பெற்றது. இதில் புளியங்குடி நகரபாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் ஷாகுல் ஹமீது அவர்கள் தலைமை தாங்கினார்கள்.நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் லுக்மான் ஹக்கீம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள்.
Puliangudi Why Popular Front Campaign