நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 6 நவம்பர், 2011

தொப்பிகளுக்கும், சலிப்படையும் பேச்சுக்கும் உண்ணாவிரதத்தில் இடமிருக்ககூடாது, மோடி அலுவலகம் உத்தரவு



modi1
காந்திநகர் : சமீபத்தில் வெவ்வேறு தருணத்தில் இரண்டு முஸ்லிம்கள் தொப்பி, அரபுகளின் தலைப்பாகையை வழங்கி அதை மோடி நிராகரித்ததைப் போன்ற சங்கடமானநிலை திரும்பவும் நடக்கக்கூடாது என்று மோடியின் அலுவலகம் உத்தரவு பிறப்பித்திருப்பதாக தெரிகிறது.

மூத்த அதிகாரிகள் கலந்தாலோசித்து இனி மேடை ஏறுமுன் ஒவ்வொருவரின் அடையாள அட்டையையும் சரிபார்ப்பதென்றும், கட்சி அதிகாரிகளின் அனுமதியின்றி தொப்பி, சால்வை போன்றவை அனுமதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளனர்.

மோடி உண்ணாவிரதத்தின் போது தங்களால் முடிந்தவரை தொழிலதிபர்கள், சமூக மற்றும் மத தலைவர்களை அழைத்துவரலாம் என்று கட்சியினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேடையில் பேசும் அமைச்சர்கள் திரும்ப திரும்ப ஒரேவிஷயத்தை பேசியும், நீண்ட சொற்பொழிவின்மூலம் மக்களை சலிப்படைய செய்யாமல் இருக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மோடி இதுவரை மூன்று உண்ணாவிரதம் இருந்துள்ளார். இந்த உண்ணாவிரதங்கள், ”சமூக நல்லிணக்கத்திற்காகவும், ஒற்றுமை, சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்காக” என்று , உச்சநீதிமன்றம் ஜக்கியா ஜாப்ரி வழக்கில் மோடி, 61 அமைச்சர்கள், அதிகாரிகள், போலீஸ்அதிகாரிகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய உடன் அறிவித்தார்.