நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 6 நவம்பர், 2011

மோடி தேசத்தின் அவமானம்

குஜராத் இனப்படுகொலை நடைபெறுவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பு பிரபல சமூகவியல் அறிஞரும், சிந்தனையாளரும், எழுத்தாளருமான ஆஷிஷ் நந்தி அன்று ஆர்.எஸ்.எஸ்-ன் பிரச்சாரகராக பணியாற்றிய இன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் நடத்திய நேர்முகத்தின் அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டார். "நேர்முகம் முடிந்து நடுக்கத்துடன் நான் வெளியேறினேன்."
அனைத்து குணங்களும் பொறுந்திய ஒரு ஃபாசிஸ்டைத்தான் சந்தித்துள்ளேன் என்பது எனக்கு புரிந்தது. ஃபாசிஸ்டு என நான் அழைப்பது ஆட்சேபகரமான வார்த்தை அல்ல. எல்லா குணங்களும் நிறைந்த ஒரு ஃபாசிஸ்டாக விளங்கினார் அவர். வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு மகிழ்ச்சியான எதுவும் அந்த சந்திப்பு எனக்கு அழிக்கவில்லை. சமூக வல்லுனர்கள், நிபுணர்களின் கருத்திற்கு இணங்க சர்வாதிகாரத்தின் பரிபூரணமான ஒரு மன நிலை கொண்ட நபராக அவர் விளங்கினார். ஒரு கொலையாளியை சில வேலையில் ஒரு கூட்டுக்கொலையாளியை நான் சந்தித்தேன். முற்றிலும் பீதியுடன் அல்லாமல் நாட்டின் எதிர்காலத்தை நோக்கி எனது பார்வையை செலுத்த முடியவில்லை.
மோடியின் உண்ணாவிரதத்தை எதிர்க்கும் 2002 கலவரத்தில் பாதிக்கப்பட்ட‌ முஸ்லிம்கள்

ஆஷிஸ் நந்தியின் அனுமானங்கள் தவறில்லை. பத்தாண்டுகள் முடியும் முன்பே எவ்வித தயக்கமும் இல்லாமல் தான் ஒரு ஃபாசிஸ்டு என்பதை உலகின் முன்னில் நிரூபித்தார் மோடி. கொடூரமான மிருகத்தனத்தின் தீவிர தன்மையால் குஜராத் இனப்படுகொலையின் நினைவலைகள் இன்றும் உலகை நடுங்கச் செய்கின்றன. முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் புகுந்த மோடியின் எதற்கும் தயாரான தொண்டர்கள் முஸ்லிம் ஆண்களை தாக்கி உறுப்புக்களை சேதப்படுத்தி, உயிரோடு தீயிட்டு கொழுத்தினர்.

 பெண்களையும், சிறுமிகளையும் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய பிறகு தீயிட்டு கொழுத்தினர். கற்பினிகளின் வயிற்றை கீறி சிசுவை சூழாயுதத்தால் குத்தி எடுத்து தீயிட்டு பொசுக்கினர். சிறு குழந்தைகளின் வாயில் பலவந்தமாக பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். அந்த குழந்தைகள் தீப்பிழம்புகளாக மாறி அலறுவதை கண்டு கைகொட்டி சிறித்தனர். 

கொடிய விலங்குகள் கூட வெட்கம் அடையும் அளவிற்கு கொடூரங்களை புரிந்த மோடி ஆட்சிகட்டிலில் அமர முடியும் என்றால் அவருக்கு பொறுத்தமானது இரத்தத்தின் தேய்ந்த கிரீடமாகும். 

மனித குலத்திற்கு விரோதமான ஒரு கொள்கையால் ஈர்க்கப்பட்ட ஒரு கும்பலால் அவமானப்படுத்தப்பட்டு அநீதிக்குள்ளான ஒரு சமூகத்தின் துயரமான நிலையை குஜராத்தில் நாம் கண்டோம். 




மனிதன் என்பவன் மகத்தானவன் என்ற தத்துவத்தை நாம் இது நாள் வரை எண்ணியதெல்லாம் பொய்த்துவிட்டது. மனித நாகரீகம் இவ்வுலகிற்கு அளித்த மகத்துவமான பங்களிப்புகள் எல்லாம் அழிந்து போய்விட்டது என்ற எண்ணம் உணர்வுள்ள ஒவ்வொரு இந்தியனுக்கும் ஏற்பட்ட நாட்கள் தான் அவை. 

அப்பொழுதும் வெறிப்பிடித்த இரத்தக்காட்டேறியின் மர்ம புன்னகையுடன் அந்த இரத்தக்களரி திருவிழாவைப் பார்த்து ரசித்த ஒரு தலைவனும் ஒரு மாநிலமும் இந்த நாட்டில் உண்டு என்றால் அது மோடியும் மோடியின் மாநிலமுமான குஜராத்துமாகும். 

தனது பாதுகாப்பின் கீழ் வாழும் ஒரு சமூகத்தின் மீது நடத்தப்பட்ட அட்டூழியங்களுக்கும் கொடூரங்களுக்கும் மறந்து போய் கூட அனுதாபத்தில் ஒரு வார்த்தையை கூற இது வரை மோடி தயாராகவில்லை. நிரபராதிகள் இரத்த கறை படிந்த அவலட்சனமான அந்த முகத்திற்கு சொந்தக்காரன் ஜனநாயக இந்தியாவின் தலைவனாக மாறினால் எவ்வாறு இருக்கும் என்ற சிந்தனைக்கூட தேசவிரோதமாகும்.

இந்தியாவில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் இந்த தேசமோ இந்த தேசத்தின் எதிர்காலமோ தங்களுடைய பொருளாதார விருப்பங்களை விட பெரிதல்ல. தங்களுக்கு பட்டுக்கம்பளத்தை விரிப்பவர்கள் எந்த சாத்தானாக இருந்தாலும் அவனை ஆதரிக்கவும் புகழ் பாடவும் முதலாளித்துவ சக்திகள் தங்களின் கை வசம் இருக்கும் அனைத்து நுட்பங்களையும் உபயோகப்படுத்துவார்கள் என்பது உறுதி.

வளர்ச்சி என்ற பெரும் பொய்யை திரையாக பயன்படுத்தி இந்த தேசத்தின் பாரம்பரியத்திற்கும் விழுமியங்களுக்கும் பொருந்தாத ஒரு தீய சக்தியை இந்த நாட்டின் தலைவனாக்க ஏகாதிபத்திய சக்திகள் முயல்கிறார்கள்.

இந்நாட்டின் மீது பற்றுள்ளவர்கள் இம்முயற்ச்சியை எதிர்தே தீர வேண்டும். தகுதி இல்லாதவர்களின் ஆசைகள் இந்நாட்டின் மோசமான கனவுகளாக மாறாதிருக்க வேண்டுமெனில் ஒவ்வொரு குடிமகனும் எச்சரிக்கயாக இருந்தே தீர வேண்டும். குற்றவாளி கூண்டில் நிற்பவரை பிரதமர் பதவியில் அமர்த்தி அழகு பார்க்க முடியுமா?

இன்றைய காலங்களில் இந்த தேசம் சந்தித்த நெருக்கடிகளின் போதெல்லாம் ஜாதி, மத பேதமின்றி போராடிய பாரம்பரியம் நமக்கு சொந்தமானது. அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிராக 1857 ஆம் ஆண்டு நடந்த சுதந்திர போராட்டமே இதற்கு உதாரணமாகும்.

இன்று வெளிநாட்டில் உருவான ஃபாசிஸம் என்ற வெறுப்பு கொள்கையை விழுங்கி அந்நிய மற்றும் முதலாளித்துவ சக்திகளின் ஆதரவுடன் இந்நாட்டின் எதிர்காலத்தை நாசமாக்க திட்டமிடம் உள்நாட்டு தீய சக்திகளுக்கு எதிராக போராட வேண்டிய கட்டாயம் இந்த தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்பட்டுள்ளது. அத்தகையதொரு போராட்டத்தை முன்னெடுத்து செல்ல அனைத்து இந்தியர்களும் கைகோர்ப்பது காலத்தின் கட்டாயமாகும்.


நன்றி: விடியல் வெள்ளி