நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 8 நவம்பர், 2011

சிமி தொடர்பு:பொய் வழக்கில் கைதுச்செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை

Karnataka-map3
பெங்களூர் : இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்துடன்(சிமி) தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி கர்நாடகா மாநிலம் பெல்காமில் பதிவுச்செய்யப்பட்ட 2 வழக்குகளில் 11 முஸ்லிம் இளைஞர்களை நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என கூறி விடுதலைச்செய்துள்ளது. 2008-ஆம் ஆண்டு பதிவுச்செய்யப்பட்ட இவ்வழக்கில் பெல்காம் அமர்வு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் முஸ்லிம் இளைஞர்களை
விடுதலைச்செய்வதாக அறிவித்தார்.
இஜாஸ், நபீல் காஸிம், நாஸர் வெங்கிடேஷ், தன்வீர் முல்லா, லியாக்கத் அலி, நதீம் ஸய்யித், நாஸர் பட்டேல், டாக்டர் மும்கோஜ், டாக்டர் ஆஸிஃப், ஜக்கால்ஃபி, இம்தியாஸ் ஆகியோரை நீதிமன்றம் நிரபராதிகள் என தீர்ப்பளித்து விடுதலைச்செய்துள்ளது.நாசவேலைகளுக்காக சதித்திட்டம் தீட்டியதாகவும், பாலத்திற்கு அருகே குண்டு கண்டுபிடிக்கப்பட்டதில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியும் இவ்வழக்குகள் பதிவுச்செய்யப்பட்டன.
இவ்வழக்கில் 13 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.இதில் ஏராளமான வழக்குகளில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள ஹாஃபிஸ் ஹுஸைன், அபூ பஷீர் ஆகியோர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு இவ்வழக்குகளில் விசாரணை நடைபெற்றது.
2008-ஆம் ஆண்டு மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் சிமி தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி 13 பேரை போலீஸார் கைதுச்செய்ததை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இவர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவுச்செய்யப்பட்டன.பெல்காம் வழக்கில் குற்றவாளியாக ஜோடிக்கப்பட்ட டாக்டர் ஆஸிஃப், டாக்டர் மும்கோஜ் ஆகியோர் ஹூப்ளி வழக்கிலும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். நதீம் ஸய்யித், நாஸர் பட்டேல் ஆகியோர் அஹ்மதாபாத் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பெல்காம் வழக்கில் குற்றவாளிகளாக ஜோடிக்கப்பட்ட மீதமுள்ள 7 பேர் நேற்று இரவு விடுதலையானார்கள்.ஹூப்ளி வழக்கில் இதுவரை 150 சாட்சிகளின் விசாரணை நிறைவடைந்துள்ளது.இனியும் இருநூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகளின் விசாரணை நடைபெறவேண்டியுள்ளது.அடுத்த விசாரணை இம்மாதம் 24,25,26 ஆகிய தேதிகளில் நடைபெறும். கேரளாவைச் சார்ந்த முஸ்லிம் இளைஞர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள அஹ்மதாபாத் வழக்கில் இன்று விசாரணை நடைபெறுகிறது.