நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 10 நவம்பர், 2011

பெட்ரோல் உயர்வை திரும்பப்பெற வேண்டும் - மத்திய அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்

கோழிக்கோடு: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எண்ணெய் நிறுவனங்களின் விலை கட்டுப்பாட்டை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்யும் 


அதிகாரத்தை தடுத்து மத்திய அரசு அதனை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என கேரள பாப்புலர் ஃப்ரண்டின் பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார்.
இத்தகைய எண்ணெய் நிறுவனங்கள் உலகச்சந்தையின் விலையேற்றத்தின் படி உயர்த்தாமல் சகட்டுமேனிக்கு மாதம் இருமுறை என்ற கணக்கில் விலைகளை கடுமையாக உயர்த்தி வருகின்றன. மேலும் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்த போதும் இவர்கள் பெட்ரோல் விலையை குறைக்க மறுக்கிறார்கள்.

இந்த எரிபொருள் விலையேற்றத்தால் இந்த எண்ணெய் நிறுவனங்கள் அதிக அளவில் லாபம் சம்பாதிக்கின்றனர். மத்திய அரசு எடுத்து வரும் இந்த நடவடிக்கையால் விலை வாசி உயர்வால் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு இது பெரும் சவாலாகவே அமைந்துள்ளது.

மக்களுக்கு எதிராக செயல்படக்கூடிய இத்தகைய அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் போராட தயாரக வேண்டும். இவ்வாறு அப்துல் ஹமீத் கூறினார்