நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 8 நவம்பர், 2011

SDPI மீதான காவல் துறையின் அடக்குமுறை தொடர்ந்தால் தமிழக சட்ட மன்றம் முற்றுகையிடப்படும்

சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியாவின் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல் துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது . SDPI ன் துறைமுகம் தொகுதி தலைவர் அமீர் சுல்தான் ,திரு.வி.க நகர் தொகுதி தலைவர் ஜியாவுல்லா
மற்றும் நிர்வாகி அப்துல்லா ஆகியோர் பொய் வழக்கு ஒன்றில் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர் .அரசியல் காழ்புணர்வின் காரணமாக SDPI தொண்டர்களிடையே அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட இந்த கைதுச்சம்பவத்தை கண்டித்து 5.11.2011 அன்று மாலை 4.30 மணியளவில் சென்னை மொமோரியல் ஹால் முன்பு பிரமாண்ட ஆர்பாட்டம் நடைபெற்றது.


கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் ஆண்களும்,பெண்களும் குவிந்தனர் .ஆர்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய SDPI ன் மாநில தலைவர் K.K.S.M தெஹலான் பாகவி தன் உரையில்,பேசியதாவது, அரசியல் காழ்புணர்சியின் காரணமாக SDPI ன் நிர்வாகிகள் மீது பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். SDPI ன் துறைமுகம் தொகுதி தலைவர் அமீர் சுல்தான் 60 வது வட்ட மாமன்ற வேட்பாளராக போட்டியிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றவர்.இதனால் அந்த வார்டில் போட்டியிட்ட ஆளும் ஆ.தி.மு.க தோல்வியை தழுவியது .
இதை காரணமாக வைத்து அவர் மீது பொய்வழக்கு பதியப்பட்டுள்ளது.அதே போல் கொள்கை பிடிப்போடு கட்சி பணிகளை சிறப்பாக செய்து வந்த SDPI யின் திரு.விக நகர் தொகுதி தலைவர் ஜியாவுல்லா மற்றும் அப்துல்லா உள்ளிட்ட நிர்வாகிகள் மீதும் இதே காரணத்திற்காக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. SDPI தொண்டர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு கைது செய்துவிட்டால் அதன் செயல்பாடுகளை முடக்கிவிடலாம் என அரசோ காவல் துறையோ நினைக்குமானால் அந்த என்னம் தவறானது. நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள் பிற கட்சிகளை போல் பணம் தருகிறோம் பதவி தருகிறோம் எனக்கூறி நாங்கள் உறுப்பினர்களை சேர்ப்பதில்லை.

SDPIல் இனைந்தால் மக்கள் சேவையில் ஈடுபட்டால் பொய் வழக்குகள் உங்கள் மீது பதியப்படும் . காவல் துறை உங்கள் வீட்டு கதவை உடைத்து உங்களை இழுத்து செல்லும் அதர்கெல்லாம் நீங்கள் தயார் என்றால் நீங்கள் SDPI யில் இணையுங்கள் என்று கூறித்தான் உறுப்பினர்களை சேர்க்கிறோம். எனவே பொய் வழக்குகளுக்கு ,அநீதிக்கு SDPI என்றுமே அடிப்பனியாது. SDPI ன் தொண்டர்கள் மீது இது போன்ற அடக்குமுறைகள் தொடர்ந்தால் எங்களது போரட்டம் மேலும் தீவிரபடுத்தப்படும். அது தமிழகம் தழுவிய போரட்டமாக உருவெடுக்கும்.
 தேவைபட்டால் தமிழக சட்டமன்றத்தை பல்லாயிரக்கணக்கான SDPI தொண்டர்கள் முற்றுகையிட்டு தங்கள் சக்தியை நிரூபிப்பார்கள் . எனவே காவல்துறை இது போன்ற தேவையற்ற காரியங்களில் ஈடுபட்டாமல் பயன்தரதக்க செயல்களில் ஈடுபட வேண்டும் என ஆலோசனைகள் கூறுகிறோம். இவ்வாறு பேசினார். மாநில தலைவர் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு வட சென்னை மாவட்ட தலைவர் எஸ் அமீர் ஹம்சா தொகுப்புரைநிகழ்த்தினார், மாநில செயற்குழு உறுப்பினர் ரத்தினம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார், தென் சென்னை மாவட்ட தலைவர் உசேன், திருவள்ளூர் மாவட்ட தலைவர் புஹாரி,காஞ்சி புரம் மாவட்ட தலைவர் பிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர் , SDPI மாநில செயலாளர் அபுபக்கர் சித்தீக் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் அன்சாரி மற்றும் உயர் நீதி மன்ற வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர் .இறுதியாக மாநில செயற்குழு உறுப்பினர் ஜாகிர் உசேன் அவர்கள் நன்றியுரை யாற்றினார்