நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 10 நவம்பர், 2011

முஸ்லிம் என்பதால் பணி நீக்கம்


பிலடெல்பியா : ஹோல் பூஃட்ஸ் மார்க்கெட்டின் முன்னால் பணியாளர் முஸ்லிம் என்பதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கிளேன் மேக் என்பவர் இஸ்லாத்தை ஏற்று தன்னை பாதித்த சில விமர்சனங்களால் இஸ்லாத்தை மறைவாக கடைபிடித்து வந்துள்ளார்.
அவர் கடந்த செவ்வாய் அன்று பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தான் முஸ்லிம் என்பதால் பணியிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேக் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஹோல் பூஃட்ஸ் மார்க்கெட்டில் பணி புரிந்து வந்தார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் விடுப்பு எடுத்ததாகக் கூறி பணியிலிருந்து நீக்கப்பட்டார் என்று அவருடைய வழக்கறிஞர் அமரா சௌத்ரி தெரிவத்துள்ளார். மேலும் மேக் கடந்த மார்ச் மாதம் அமெரிக்க சம வேலைவாய்ப்பு கமிசனிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார் என்றும் இன்னும் சில வாரங்களில் இந்த புகாருடன் இன்னும் சில புகார்களை சேர்க்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மேக் கூறியதாவது தான் ஹோல் பூஃட்ஸ் மார்க்கெட்டின் நிர்வாகத்துடன் நல்லா இணக்கமாக இருந்ததாகவும் பணியாளர்களின் நல நிதியை தம்மிடம் ஒப்படைத்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற பொறுப்பை தமக்கு நிர்வாகத்தினர் வழங்கி இருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் ஹோல் பூஃட்ஸ் மார்க்கெட்டின் சி.இ.ஒவும் மற்றும் இணை நிறுவனருமான ஜான் மேக்கியை சந்திக்கும் வாய்ப்பும் தமக்கு அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்த அவர் தன்னுடைய ஆண்டு விடுமுறையை ஹஜ் செய்வதற்காக தான் பயன்படுத்துயத்தை தன்னுடைய மேலாளர்கள் அறிந்துகொண்ட பின்னர்தான் தனக்கு பிரச்சனைகள் வர ஆரம்பித்தது என்று கூறியுள்ளார்.
மேலும் தாம் ஹஜ் செய்துவிட்டு திரும்பிய பின்னர் பணி சேர்ந்ததாகவும், ஆனால் தனக்கு முழுநேரப் பணி கொடுக்கப்படாமல் பகுதிநேரப் பணி கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும் தான் பணி செய்த போது தனது மேலாளர்கள் தன்னை எப்போதும் பின்தொடர்ந்து தாம் ஐந்து நேரம் தொழுவதை வேவுபார்ததாகவும் அவர் கூறினார். மேலும் தாம் குப்பைகளுக்கு நடுவில் தொழுகை நடத்தும் கட்டாயத்தில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து ஹோல் பூஃட்ஸ் மார்க்கெட்டின் செய்தி தொடர்பாளர் லோவ்ரே இந்த குற்றச் சாற்றை மறுப்பதாகக் கூறியுள்ளார். எனினும் தங்கள் மார்கெட்டில் பணிசெய்யும் நபர்களின் விபரம் தர அவர் மறுத்துவிட்டார். மேலும் தங்கள் நிறுவனம் திறந்த கொள்கையுடன் இருப்பதாகவும் முஸ்லிம்கள் பலர் அங்கு பணிபுரிகின்றனர் என்றும் கூறியுள்ளார். மேலும் இப்பிரச்சனையை தாங்கள் அணைத்து கோணங்களிலும் அணுகுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இப்பிரச்சனையை குறித்து இன்னும் முறையான புகர் எதுவும் பதிவு செய்யப்பட வில்லை என்றும் பென்னிசில்வானியா மனித தொடர்பு கமிசனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறிய அமரா சௌத்ரி மேக் தன்னுடைய பணி நீக்கத்திற்கு இழப்பீடு வேண்டும் என்றும் தன்னை பணிக்கு திரும்ப அழைக்க வேண்டும் எனவும் தன்னுடன் பணியில் இருந்த அனைவருக்கும் சகிப்புத்தன்மைக்கான பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.