நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 10 நவம்பர், 2011

ஷேஹ்லா மசூத் கொலைவழக்கில் துப்புகிடைக்க சிபிஐ பேஸ்புக்கில் தேடல்

shehla-masood-facebook-295
32 வயதான மனித உரிமை போராளியான ஷஹ்லா மசூத், ஆகஸ்ட் 16 அன்று அடையாளம் தெரியாத நபரால் அவரது வீட்டுவாசலில் பட்டப்பகலில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.


இந்த வழக்கு மூன்று வாரங்களுக்கு முன்புடெல்லி சிபிஐ வசம்வந்தது.இந்த வழக்கில் இதுவரை எந்த தடயமும் கிடைக்காததையடுத்து சிபிஐபேஸ்புக்கில் சிபிஐ போபால் என்ற பெயரில் புதிய பக்கம் ஒன்றை திறந்துள்ளது. எங்களின் விசாரணையை பகிர்ந்துகொள்வதற்காகவும்,வழக்குவிசாரனையில் ஏதும் உதவியாக தகவல் கிடைக்குமா என்ற நோக்குடன்தான் ஆரம்பித்தோம். இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.
குறிப்பாக இந்த வழக்கில் இதை நாங்கள் தொடர்வோம், இது எங்களுக்கும் மக்களுக்கும் எதிர்காலத்தில் உதவும் என்று நம்புகிறோம் என்று இந்த பேஸ்புக் பக்கத்தை தொடங்கிவைத்த போபால் டிஐஜி  ஹேமந்த் பிரியதர்ஷி கூறினார்.
கொல்லப்பட்ட மசூத் இயற்கையை பாதுகாக்கும் அமைப்பில் பணியாற்றிவந்தார்,மேலும் நல்லாட்சியை விரும்புவராகவும், ஆர்டிஐ செயற்பாட்டிலும்,சுற்றுச்சூழல், பெண்ணுரிமை, பாலியல் கொடுமைகளுக்கு ஆளான சிறுவர்களின் உரிமைகள் இவற்றுக்காகவும் குரல் கொடுத்து வந்தார்.
மத்தியபிரதேசத்தின் பல்வேறு சரணாலயங்களில் புலிகள் இறப்பு அதிகரிக்கும் பிரச்சனையில்தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அரசுக்கு எதிரான போராட்டத்தில் சேருவதற்காககிளம்பியபோதுதான் கொல்லப்பட்டார்.கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை சிபிஐயால் இதுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. சிபிஐயின் போபால் பிரிவு குற்றவாளிகளை பிடிக்க ஏதுவாகதுப்பு தருபவருக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானம் தரப்படும் என்றுஅறிவித்திருக்கிறது.