நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 8 பிப்ரவரி, 2012

ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 4 மாதமாக அதிகரிப்பு


டெல்லி : ரயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவுக் காலம் நான்கு மாதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மார்ச் 10ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Train


இது குறித்து ரயில்வேதுறை வட்டாரங்களில் கூறப்படுவதாவது,

ரயில் பயணத்துக்கு முன்பதிவு டிக்கெட் பெறுவதற்கான இடைவெளி, தற்போது 90 நாட்களாக உள்ளது. இதனை 120 நாட்களாக அதிகரிக்க, ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. வரும் மார்ச் 10ம் தேதியில் இருந்து இந்த திட்டத்தை அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு வசதியாக, ரயில்வே தகவல் தொடர்பு மென்பொருளில் மாற்றங்கள் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், குறுகிய தூர ரயில்களுக்கு, முன் கூட்டியே டிக்கெட் பதிவு செய்யும் நாட்களில் மாற்றம் செய்யப்படவில்லை. 15 நாட்களுக்கு முன், டிக்கெட் பதிவு செய்யும் நடைமுறையே, தொடர்ந்து அமலில் இருக்கும் இவ்வாறு ரயில்வேத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.