கடந்த 2010 ஆம் வருடம் மார்ச் மாதம் 3ஆம் தேதி அன்று இஸ்ரேலின் உளவுப்பிரிவான் மொஸாதைச் சேர்ந்த இருவர்கள் (கணவன் மனைவி) உளவுப்பார்ப்பதற்காக கொச்சியில் (கேரளா) தங்கியிருந்தனர். ஷினோர் ஜல்மன் மற்றும் அவனது மனைவி யஃபா சினோய் ஆகிய இருவரும் மல்டிபில் என்ட்ரி விசா (ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வரலாம்) மூலம் இந்தியா வந்து கொச்சி துறைமுகம் அருகே உள்ள ரோஸ் தெருவில் அதிக பணம் கொடுத்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்திருக்கின்றனர்.
முக்கிய தகவலின் அடிப்படையில் 26/11 மும்பை தாகுதலுக்கு பிறகு இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக மொஸாத் அமைப்பினரின் ஊடுருவல் அதிக அளவில் இருப்பதாக இரகசிய செய்தி கிடைத்ததும் மத்திய புலானாய்வு பிரிவு எச்சரிக்கை அடைந்தது. இருந்த போதிலும் இருந்த போதிலும் தெற்கு மும்பையில் நடைபெற்ற தாக்குதலில் யூத மத குரு மற்றும் அவரது கர்ப்பிணி மனைவி என மொத்தம் 6 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக எல்லா மாநிலங்களிலும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டது. இறுதியாக கேரளாவில் நமது புலனாய்வுப்பிரிவினரால் கொச்சி துறைமுகம் அருகே மொஸாத் அமைச்சேர்ந்த கணவன் மனைவி இருவர்கள் கைது செய்யப்பட்டனர் என உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
இவர்களின் பணம் பரிமாற்றங்களை நமது இந்திய உளவுத்துறையினர் சுலபமாக கண்டுபிடித்தனர். மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் இன்னும் எண்ணற்ற மொஸாத் உளவாழிகள் நாட்டின் பல பகுதிகளிலும் ஊடுறுவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதை விட்டுவிட்டு இரு நாடுகளின் முக்கிய தலைவர்களின் ஆணையின் படி இருவர்களும் கடந்த திங்கட்கிழமை அன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்பு இவர்களை கைது செய்த கேரள காவல்துறை இவர்களை உண்ணிப்பாக பின் தொடர்ந்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி அதற்கான அறிக்கைகளை எர்ணாகுளம் ஆட்சியரான ஷேக் பரீதிடம் ஒப்படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த அறிக்கையில் இவர்களைப்போன்று பலரும் இவ்வாறு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அவ்வப்போது அவர்களுக்கு மத்தியில் சந்தித்துகொண்டு இரவு நேரங்களில் பல மணி நேரங்களுக்கு மேலாக கூட்டம் நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
நாட்டை உளவு பார்க்க வந்தவர்கள் என்று தெரிந்திருந்தும் அவர்களை விடுவித்திருப்பதை பார்க்கும் போது இந்தியா இஸ்ரேலுடனான உறவில் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற ரீதியிலேயே நடவடிக்கை எடுக்காமல் விடுவித்திருக்கிறது.