ஜெருசலம் : ஃபலஸ்தீன் இயக்கங்களான ஹமாஸும், ஃபத்ஹும் இணைந்து ஐக்கிய அரசை உருவாக்கியதால் இஸ்ரேலுக்கு கட்டுப்படுத்த முடியாத கோபம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது கோபத்தை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் அவிக்டர் லிபர்மன்,தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
ஃபத்ஹ்-ஹமாஸ் இயக்கங்கள் பங்கேற்கும் தேசிய ஐக்கிய அரசை உருவாக்குவது அமைதிக்கு அச்சுறுத்தலாகும். ஹமாஸை ஆட்சியில் கூட்டாளியாக சேர்த்ததை கடுமையாக எதிர்ப்போம். இஸ்ரேலின் இருப்பையே அங்கீகரிக்காத தீவிரவாத குழுதான் ஹமாஸ்’ என லிபர்மன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை ஃபத்ஹ் தலைவர் மஹ்மூத் அப்பாஸும், ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அலும் ஐக்கிய அரசு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.