ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26ம் தேதி உலக சித்திரவதை எதிர்ப்பு தினமாக ஐ.நா. சபையால் அனுஷ்டிக்கப்படுகிறது. மேற்படி சித்திரவதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (NCHRO) இன்று 29.06.2013 சென்னை பெரியமேட்டில் உள்ள ஹோட்டல் பனாரில் காலை 11.00 மணி முதல் 1.30 வரை “காவல்துறையின் சித்திரவதைககள், என்கவுண்டடர்கள் மற்றும் பொய் வழக்குககள் ” என்ற தலைப்பில் ஒரு கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கலந்தாய்வுக் கூட்டடத்திற்கு NCHROவின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர். ஏ. முஹம்மது யூசுப் தலைமை தாங்கினார்.. வழக்கறிஞர் ஏ. ராஜா முஹம்மது வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்., இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். சத்தியசந்திரண், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்PUCLசெயலாளர் நெல்லை முபாரக், த.மு.மு.க. செயலாளர் பேராசிரியர். ஹாஜா கனி கக்இஃ அமைப்பின் செயல்பாட்டாளர் மற்றும் ஊடகவியலாளர் T.S.S.மணி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.அஹமது பக்ரூதீன், பத்திரிகையாளர் ஆளுர் ஷாநவாஸ், கலைஞர் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் முஹம்மது இஸ்மாயில், எஸ்.டி.பி.ஐ.ன் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த கோபிநாத், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் ஜெய்னுல் ஆபிதீன், NCHROவின் மக்கள் தொடர்பு அலுவலர் வழக்கறிஞர் ஏ.சையது அப்துல் காதர், வழக்கறிஞர்கள் ஏ. முஹம்மது ஷாபி, (மதுரை), முஹம்மது நவ்ஃபல் (கோவை), சதாத் (சென்னை), முஹைதீன் அப்துல் காதர் (சென்னை), முஹம்மது பைசல் (திருவாரூர்) மற்றும் பல உயர்நீதிமன்ற வழக்கறிõகள் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார்கள்.
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில்,
1.மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மற்றும் சிறுபான்மை அமைப்பின் தலைவர்கள் மீது வேண்டுமென்றே பொய் வழக்குபோடும் காவல்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொய் வழக்குகள் வாபஸ் பெற வேண்டும்.
2.மதுரையில் முஸ்லிம் இளைஞர்களை கடந்த ஆறு மாதங்களாக வழக்கு விசாரனை என்ற பெயரில் அழைத்துச் சென்று சித்திரவதை செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3.கோவையில் மீண்டும் ஒரு மத பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இஸ்லாமிய இளைஞர்கள் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4.பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும்; காவல்துறையின் சித்திரவதையை தடுத்து நிறுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5.இந்திய அரசு சரியான சித்திரவதை எதிர்ப்பு சட்டம் ஒன்றை நிறைவேற்ற வேண்டும்.
6.ஐ.நா. அவையின் சித்திரவதை எதிர்ப்பு உடன்பாட்டிற்குச் சட்ட ஏற்பு அளிக்க வேண்டும்.
7.மனித உரிமை பாதுகாப்பு சட்டத்திற்கு தகுந்த விதிகள் உருவாக்க வேண்டும்.
8.காவல் நிலையங்களில் சித்திரவதையை தடுக்க அனைத்து காவல் நிலையங்களிலும் வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
என்றும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
மேலும் இந்த தீர்மானங்களை ஒரு அறிக்கையாக்கி தமிழக காவல்துறை தலைமை இயக்குநர், உள்துறை செயலாளர், மாநில மனித உரிமை ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம், பாரத பிரதமர், மத்திய சட்ட அமைச்சர் ஆகியோருக்கு கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கலந்தாய்வுக்கூட்டத்தில் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இணைந்து சித்திரவதைக்கெதிரான சட்டப் பாதுகாப்பு, சித்திரவதை கொடுமைகளை ஆவணப்படுத்துதல், சித்திரவதைக்கெதிரானப் போராட்டத்தில் மக்களை ஒருங்கிணைக்க பரப்புரை செய்தல் ஆகியவற்றிற்காக “சித்திரவதைக்கு எதிரான மக்கள் இயக்கம்” (People Movement Against Torture) என்ற செயல்பாட்டு தளம் (Platform) உருவாக்கப்பட்டு அதன் கன்வீனராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு. சத்திய சந்திரண் அவர்களும், ஒருங்கிணைப்பாளராக வழக்கறிஞர் ஏ. முஹம்மது யூசுப் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். நிறைவாக வழக்கறிஞர் ஏ.ஆர். முஹம்மது பைசல் நன்றியுரை கூறி முடித்து வைத்தார்.