நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 5 ஜூலை, 2013

புத்த தீவிரவாதம்:டைம் பத்திரிகைக்கு இலங்கையில் தடை ஏன்?

புத்த தீவிரவாதம் குறித்து டைம் பத்திரிக்கையில் வந்த செய்தி 

மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம் சாட்டி டைம்' பத்திரிகையின் விற்பனையை தடை செய்த இலங்கை அரசு, அப்பத்திரிகையின் அனைத்துப் பிரதிகளையும் பறிமுதல் செய்துள்ளது.மியான்மரில் புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையேயான கலவரம் குறித்த செய்தியை "டைம்' பத்திரிகை வெளியிட்டிருந்தது. அப்பத்திரிகையின் ஜூலை 1-ம் தேதி பதிப்பில் புத்த தீவிரவாதம் குறித்த கட்டுரை வெளியாகியிருந்தது.


விமானத்தில் வந்த அப்பத்திரிகையின் 4,000 பிரதிகளை கொழும்பு சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அக்கட்டுரை இருப்பதால், "டைம்' பத்திரிகையின் பிரதிகளை பறிமுதல் செய்ததாக சுங்கத் துறை செய்தித் தொடர்பாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன் முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனை என்ற அமைப்பு பல்வேறு இனவெறி கொண்ட போராட்டங்களை நடத்தியதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது குறிப்பிடத்தக்கது.