சென்னை: ஃபவுண்டெசன் டிரஸ்ட் (TNDFT) - ன் 20 வது ஆண்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை ஹாலில் வைத்து 30.06.2013 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணி அளவில் நடைபெற்றது.படைத்த இறைவனின் கட்டளைப்படி, அவனது மார்க்கத்தை பிற சமூகத்தவர்களுக்கு எத்தி வைக்கும் அழைப்புப் பணியை தமிழகம் முழுவதும் பட்டிதொட்டிமுதல் பட்டணம் வரை செய்தும், இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இஸ்லாமிய அடிப்படைக்கல்வியை போதிக்கக்கூடிய அறிவகம் எனும் கலாச்சாலையை நடத்தியும் ஆதரவற்ற மற்றும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால் கைவிடப்பட்ட பெண்களுக்காக பெண்கள் காப்பகத்தையும் நடத்திக்கொண்டிருக்கும் தமிழ்நாடு டெவலப்மெண்ட் பவுண்டெசன் டிரஸ்ட் (TNDFT) - ன் 20 வது ஆண்டு நிறைவடைவதை ஒட்டி அதன் ஆண்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை ஹாலில் வைத்து 30.06.2013 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணி அளவில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவரும் TNDFT யின் மேனேஜிங் டிரஸ்டியுமான A.S.இஸ்மாயில் தலைமை தாங்கினார். TNDFT ன் செயலாளர் K.S.M.இப்ராஹிம் என்ற அஸ்கர் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் A.K.முஹம்மது ஹனிபா, அரசு தலைமை ஹாஜி M.அப்துல்லா ரஷாதி, முஹம்மது சதக் கல்லூரியின் Deen Dr.Major.M.ஜெய்லானி, தேனி முத்துதேவன்பட்டியின் முஸ்லிம் ஜமாத் தலைவர் R.ராஜா முஹம்மது, இஸ்லாமிய அழைப்பாளர் R.முஹம்மத் அமீருத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொதுச்செயலாளர் A.ஹாலித் முஹம்மது, குமரி மாவட்ட தெற்கு எல்லை போராட்ட வீரர் கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ், SDPI கட்சியின் மாநில பொதுச்செயலாளர் M.நிஜாம் முஹைதீன், ஹிதாயா வெல்ஃபேர் டிரஸ்டின் நிறுவனர் மற்றும் மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் ஆயிஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் இறுதியாக அறிவகம் தஃவா குழுவின் ஒருங்கிணைப்பாளர் A.அபுபக்கர் சித்திக் நன்றியுரையாற்றினார்.