கியூபாவிலுள்ள குன்டனாமோ விரிகுடா கடற்படை தளத்தில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட குன்டனாமோ விரிகுடா தடுப்பு முகாமில் சட்டத்திற்கு புறம்பான சிறையும், விசாரணை வசதியும் உள்ளது.
ஆப்கானிஸ்தான் போர்க்கைதிகளையும், பிறகு ஈராக் போர்க்கைதிகளையும் சிறை வைப்பதற்காக புஷ் நிர்வாகத்தினால் ஜனவரி 11, 2002 இல் இந்த முகாம் நிறுவப்பட்டது.







