பத்திரிக்கைதுறையினரால் பழிவாங்கப்பட்டுக்கொண்டிருக்கும் முஸ்லீம் சமுதாயம், தமக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக மக்களின் சக்தியை ஒருமுகப்படுத்தாமல் இஸ்லாம் சார்ந்த இதழ்களிலேயே இழைப்பறிக் கெண்டிருக்கின்றன. அதற்கு முக்கியக்காரணம் அத்துறைில் காணப்படும் வெற்றிடமே! அவ்வெற்றிடத்தை வென்றெடுத்திடவே இளம் கைகளில் எழுதுகோலை கொடுத்து எமது இந்தப் பணியினை துவங்கினோம். சிறிய அகவில் துவங்கப்பட்ட இப்பணி இன்று பல்லாயிரம் வாசகர் வட்டத்தை தன்னுள் சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் நடக்கும் சம்பவங்கள் நிறம்மாறி வரும் காலங்களில் நிஜங்களாக வரவேண்டும் என்பதற்காக. எழுத்தாளமும், கருத்தாளமும் கொண்ட எங்களின் கட்டுரைகளுக்கு வாசகர்கள் அனுப்பும் கருத்துக்களே வலுசேர்க்கின்றன. நான்காம் ஆண்டில் அடி எடுத்துவைக்கும் எங்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து அரவணைக்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.
-ஆசிரியர் குழு-