மாஸ்கோ : ஈரான்,சிரியா பிரச்சனைகள் தொடர்பாக அந்நாடுகள் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடும் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானை தாக்குவது பெரும் துயரத்தை உருவாக்கும் என கூறியுள்ள ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் ஸெர்ஜி லாவ்ரோவ் பிராந்தியம் முழுவதும் அகதிகள் பிரச்சனையால் நெருக்கடியுல் ஆழ்ந்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் சமாதான வாய்ப்பிற்கு முட்டுக்கட்டையாக மாறியுள்ளது என கூறிய ஸெர்ஜி லாவ்ரோவ், தடைகளை கடுமையாக்கும் முயற்சிக்கு தனது அதிருப்தியை தெரிவித்தார்.
சிரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை கண்டிக்கும் தீர்மானத்தின் வரைவை கடந்த திங்கள் கிழமை பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ரஷ்யா வழங்கியது குறிப்பிடத்தக்கது.