நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

ரஷ்யா ஆளில்லா விண்கலம் இன்று பூமியில் விழ வாய்ப்பு

மாஸ்கோ: செவ்வாய் கிரகத்தினை ஆராய ரஷ்யா அனுப்பிய ஆளில்லா விண்கலம் தோல்வியடைந்ததால், அது இன்று பூமியில் விழ வாய்‌ப்பு இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. எனினும் கடல் பகுதிகளில் விழ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

இது குறித்து ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ராஸ்‌காஸ்மோஸ் விடுத்துள்ள செய்தியில், செவ்வாய் கிரகம் குறித்து ஆராய ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம், கடந்த புஹூபோஸ் எனும் ஆளில்லா விண்கலத்‌தினை கடந்த ஆண்டு நம்பவர் மாதம் 9-ம் தேதி விண்வெளியில் செலுத்தியது. ‌மொத்தம் 165மில்லியன் டாலர் செலவில் 13.5 டன் எடை கொண்ட இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தினை ஆராய்ந்து உரிய தகவல்களை அனுப்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவு செயல்படாததாதல் தோல்வியில் முடிந்தது.

இதை‌யடுத்து இந்த விண்கலம் பூமியை நோக்கி வருகிறது. இன்று புஹூபோஸ் விண்கலம், இந்தியப்பெருங்கடல் அல்லது அட்லாண்டிக் பெருங்கடலில் விழ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ராஸ்காஸ்மோஸ் தெரிவித்துள்ளது. இதன் சிதறுண்ட பாகங்கள் பசிபிக் பெருங்கடலின் சீலி நாட்டின் கடல்பகுதியிலோ விழலாம் .இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.