நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 17 ஜனவரி, 2012

தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலிடம்

தம்மாம் : வெளிநாடுகளில் பணியாற்றுவோரில் மிக அதிக அளவில் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

உலக வங்கியின் புள்ளிவிபரப்படி 2011-ஆம் ஆண்டில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியாவுக்கு 57.8 பில்லியன் டாலர்கள் வந்துள்ளது. இதில் பெரும் தொகையும் 6 வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களிடமிருந்து ஆகும்.
அண்மையில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து பணம் வரத்தின் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு பணம் அனுப்புவது அதிகரித்து வந்தபோதிலும் மிக அதிகமான பண வரத்து 2011-ஆம் ஆண்டில் நடந்துள்ளது.
இதுகுறித்து இந்திய அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ புள்ளிவிபரம் வெளியிடப்படவில்லை. ஆனால்,உலக வங்கியின் முதல் கட்ட புள்ளி விபரத்தின் படி குறைந்தது 57.8 பில்லியன் டாலர் தொகை இந்தியாவுக்கு வந்துள்ளது. இதில் சீனாவுக்கு2-வது இடமாகும். 57 பில்லியன் டாலர் தொகை வெளிநாடு வாழ் சீனர்களால் தாய்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 5-வது தடவையாகவும் இந்தியா தான் முதலிடத்தை வகித்து வருகிறது.
2006-ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் பண வரத்து அதிகரிக்க துவங்கியது. 2006-ஆம் ஆண்டு 28.3 பில்லியன் டாலர் தொகையும், 2007-ஆம் ஆண்டு 37.2 பில்லியன் டாலர் தொகையும், 2008-ஆம் ஆண்டு49.9 பில்லியன் டாலர் தொகையும், 2009-ஆம் ஆண்டு 49.4 பில்லியன் டாலர் தொகையும், 2010-ஆம் ஆண்டு 54 பில்லியன் டாலர் தொகையும் இந்தியாவுக்கு வந்துள்ளது. இதில் 2009-ஆம் ஆண்டு மட்டும் பணம் வரத்து சற்றுக் குறைந்தது.
தனிப்பட்ட நபர்களின் தேவை மற்றும் குடும்பத்தினரின் தேவையை குறிப்பிட்டு இவ்வளவு பணம் இந்தியாவுக்கு வந்துள்ளது. அதேவேளையில்,இத்தொகையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வங்கிகளில் முதலீடு செய்வது அடங்காது.
ரிசர்வ் வங்கியின் புள்ளிவிபரப்படி கடந்த ஆண்டு(2011)முதல் ஒன்பது மாதங்கள் இந்தியாவிற்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் பணம் வரத்தில் 2010 ஆம் ஆண்டு இதே கால அளவை விட 13.3 சதவீதம் அதிகரித்துள்ளது. 2010-ஆம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பணம் வரத்து இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியின் மூன்று சதவீதமாகும். 2010-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாடு வாழ் இந்தியர்களின் பண வரத்தில் 53 சதவீதமும் ஆறு வளைகுடா நாடுகளிலிருந்து ஆகும்.
அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் வந்த பின்னரே 2011-ஆம் ஆண்டு வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த பணத்தின் சதவீதம் தெரியவரும்.