நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

விஞ்ஞானி கொல்லப்பட்ட விவகாரம்: ஈரான் கண்டனம்

டெஹ்ரான் :  தன் நாட்டு விஞ்ஞானி ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஈரான் நாடு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கொடுத்து வருகிறது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இரண்டும் பயங்கரவாதத்துக்கு எதிராக செயல்படுவதாகக் கூறினாலும், அவர்கள் மண்டலங்கள் ரீதியான பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றன, அதுவும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தடுப்பு நடவடிக்கை என்ற பேரில் பழிவாங்கல் நடவடிக்கையாக எடுத்து வருகின்றன... இவ்வாறு ஒரு தொலைக்காட்சி சேனலின் ஒலிபரப்பில், ஈரான் விஞ்ஞானி கொலை குறித்துப் பேசியபோது,  ஈரான் நாட்டின் ஜெனரல் கூறினார்.

அரசு சார்பில் இயங்கிவரும் தொலைக்காட்சியில் இன்று பேசியபோது இவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டது. பிரிகேடியர் ஜெனரல் மசூத் ஜஸாயேரி கூறும்போது, ஈரான் நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தைத் தடுப்பதில் மேலைநாடுகள் இவ்வாறு செய்வதாகக் கூறிய அவர், இதற்காக கடும் கண்டனத்தைத் தெரிவித்ததுடன் இதற்கு நிச்சயம் அவர்கள் பதில் சொல்லியாகவேண்டும் என்று கூறியுள்ளார்