நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 19 ஜனவரி, 2012

கேரள அரசுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கோரிக்கை


கோழிக்கோடு :  முஸ்லிம்களில் பொது மற்றும் பத்திரிக்கையாளர்களின் மின்னஞ்சல்களில் கேரள காவல் துறை ஊடுருவுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கேரள அரசுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. 


இது குறித்து மாநில முதல்வர் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில பொது செயலாளர் பி அப்துல் ஹமீது வலியுறுத்தியுள்ளார்.

முஸ்லிம்களில் முஸ்லிம் லீக் தலைவர்களின் மின்னஞ்சல்களும் காவல் துறையால் ஊடுருவப்பட்டிருப்பது, காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வரின் கவனத்துக்கு வராமலோ, தெரியாமலோ நடந்திருக்க வாய்ப்பில்லை. காவல் துறையின் கண்காணிப்பு பட்டியலில் உங்களின் பெயர் எவ்வாறு இடம் பெற்றது என்று லீக் தலைவர்களை கேட்டுக் கொண்டார்.

காவல் துறையில் முஸ்லிம் விரோத போக்குள்ள அதிகாரிகள் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக பாப்புலர் பிரண்ட் குற்றம் சாட்டி வந்தது. மின்னஞ்சல் ஊடுருவல் நாங்கள் கூறிவரும் புகாரை சரி என உறுதிப்படுத்துகிறது. இது போன்ற நச்சு எண்ணம் கொண்ட அதிகாரிகளால் தான் "லவ் ஜிஹாத்" என்ற விசமக் கருத்துகள் கேரளாவில் உருவாக்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த மின்னஞ்சல் ஊடுருவல் என்றால் இதில் எப்படி முஸ்லிம்கள் மட்டும் உட்படுத்தப்படுவார்கள்? என்று கேரளா முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அப்துல் ஹமீது அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

மாத்யமம் மலையாள வார இதழ் மின்னஞ்சல் ஊடுருவல் குறித்து செய்தி வெளியிட்ட பிறகு தான் இப்பிரட்சினை விசுவரூபமெடுத்துள்ளது. பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் இதனை கடுமையாக எதித்து வருவதால், முதல்வர் உம்மன் சாண்டி இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். முஸ்லிம் தலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச் சொற்களை ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் மற்றும் பிற மின்னஞ்சல் சேவை நிறுவனங்களிடமிருந்தும் பெற்று ஊடுருவியுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது.