நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

செவ்வாய், 17 ஜனவரி, 2012

விக்கிபீடியா இன்று பணி நிறுத்தம்


வாஷிங்டன் : காப்புரிமை இல்லாமல் திரைப்படங்கள், வீடியோ ஆல்பங்கள், வீடியோ கேம்ஸ் ஆகியவற்றை இணையத்தளங்கள் வெளியிடுவதை எதிர்த்து அமெரிக்க காங்கிரஸ் சட்டம் நிறைவேற்ற உள்ளது.

இதனை எதிர்த்து ஆன்லைன் என்சைக்ளோபீடியா இணையதளமான விக்கிபீடியா அதன் ஆங்கில பதிப்பை இன்று(புதன்கிழமை) தனது பணியை 24 மணிநேரம் நிறுத்திவைத்துள்ளது.
திரைப்படங்கள், வீடியோ ஆல்பங்கள், வீடியோகேம்ஸ் ஆகியவற்றை இணையத்தளங்கள் வெளியிடுவதால் தங்களது வருமானம் கடுமையாக பாதிக்கப்படுவதாக ஹாலிவுட் படத் தயாரிப்பு நிறுவனங்கள் கூறி வருவதையடுத்து, இந்த சட்டத்தை அமெரிக்க அரசு கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இதற்கு கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட இணையத்தளங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்நிலையில், விக்கிபீடியா 24 மணிநேர பணிநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர இணையதள செயல்பாட்டிற்கு இச்சட்டம் அச்சுறுத்தலாக மாறும் என விக்கிபீடியா சுட்டிக்காட்டி இப்போராட்டத்தை அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் இணையதளத்தின் சுதந்திரத்திற்கு இச்சட்டத்தால் அபாயம் ஏற்படும் என இச்சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.
இச்சட்டம் நிறைவேறினால் காப்புரிமை சட்டமும், தனிநபர் சிந்தனை உரிமையும் பேணும் சேவைகளை மட்டுமே இணையதளங்களால் வெளியிட முடியும். குறிப்பாக ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் இசைப்பாடல்கள் ஆகியவற்றின் கட்டுப்பாடற்ற நிலையை கட்டுப்படுத்துவதே இச்சட்டத்தின் நோக்கமாகும்