மும்பை : மும்பையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் பந்த்ரா-ஓர்லி கடல் பாலம் 2009ஜூன் 30-ம் தேதி திறக்கப்பட்டது. இதனால் மும்பையின் வாகன நெரிசல் ஓரளவு குறைந்தது. தற்போது பந்த்ராவிலிருந்து வெர்சோவா வரை பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள பந்த்ரா-ஓர்லி பாலத்திலிருந்து இணைப்பு பாலமாக இது கட்டப்படுகிறது. 10கிலோமீட்டர் நீளத்திற்கு அமையப்போகும் இந்தப்பாலம் கட்டி முடிக்கப்படும் போது உலகத்தின் நீளமான பாலங்களின் பட்டியலில் இடம் பெறும்.