மஞ்சேரி கேரளா : இஸ்லாமிய நம்பிக்கைகளையும் அதன் போதனைகளையும் எடுத்துச் சொல்வதற்கான பிரச்சார மையம் புதிதாக உதயமாகியுள்ளது. இஸ்லாத்தை அறிய முற்படுபவருக்கு இஸ்லாமிய கல்வியை பயிற்றுவிப்பதுக்கும் இஸ்லாமிய அழைப்புப் பணிகளுக்காகவும் சத்யா சாரணி அறக்கட்டளையின் கீழ் மர்கசுல் ஹிதாயா கல்வி மையம் மலப்புரம் மஞ்சேரியில் நிறுவப்பட்டுள்ளது.
இஸ்லாமிய கல்வி மையத்தின் இஸ்லாமிய நூலகம், ஆண்களுக்கும் பெண்களுக்குமான விடுதி வசதி, மருத்துவத்திற்கான கிளினிக் ஆகியவற்றை சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி பொது செயலாளர் சயீத், ரிஹாப் இந்திய அறக்கட்டளையின் தலைவர் இ அபுபக்கர் , பாப்புலர் ப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது மற்றும் டாக்டர் பஷீர் அவர்கள் முறையே திறந்து வைத்துள்ளனர் . கே பி முஹம்மது ஷரிப் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
Dr. Mansoor Alam, chairman, Institute of Objective Studies, inaugurates Markazul Hidaya educational complex at Manjeri |
இந்த புதிய இஸ்லாமிய மையத்தை டெல்லி இன்ஸ்டிடுட் ஆப் அப்ஜெக்டிவ் ஸ்டடீஸ் தலைவர் டாக்டர் மன்சூர் ஆலம் அவர்கள் திறந்து வைத்தார்.
இஸ்லாமிய கல்வி மையத்தின் இஸ்லாமிய நூலகம், ஆண்களுக்கும் பெண்களுக்குமான விடுதி வசதி, மருத்துவத்திற்கான கிளினிக் ஆகியவற்றை சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி பொது செயலாளர் சயீத், ரிஹாப் இந்திய அறக்கட்டளையின் தலைவர் இ அபுபக்கர் , பாப்புலர் ப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது மற்றும் டாக்டர் பஷீர் அவர்கள் முறையே திறந்து வைத்துள்ளனர் . கே பி முஹம்மது ஷரிப் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
ஆயிரக்கணக்கனோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர் . பாப்புலர் ப்ரண்ட் கேரளா மாநில தலைவர் கரமண அஷ்ரப் மௌலவி ஆல் இந்திய மில்லி கவுன்சில் மாநில தலைவர் டாக்டர் சயீத் மரக்கார், சத்யா சாரணி தலைவர் முஹம்மது பஷீர், காஜி அசைனர் மௌலவி ஆகியோர் நிகழ்ச்சியின்போது சிறப்புரையற்றியுள்ளனர் . அழகிய கட்டுமானத்தை நிறுவிய ஒப்பந்ததாரரான வழக்கறிஞர் அஷ்ரப் அவர்களும் பொறியாளர் டாக்டர் முஹம்மது அவர்களும் கௌரவிக்கப்பட்டனர்