அதிரை c .m.p லைன் v .k .m ஸ்டோர் அருகே உள்ள ஒரு வீட்டில் மாடியில் இருந்து கூரை திடுரென தீப்பிடித்து மளமளவென பரவியது . இது பற்றி தகவலறிந்த பொதுமக்களும் அதிரை நகர பாப்புலர் ப்ரண்ட் செயல் வீரர்களும் விரைந்து சென்று ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர் . பாப்புலர் ப்ரண்ட் செயல்வீரர்கள் தீயை அனைத்த்ததோடு மீட்பு பணியிலும் ஈடுபட்டனர் . பாப்புலர் ப்ரண்ட் செயல் வீரர்களின் பணியினை அதிரை காவல் ஆய்வாளர் திரு.செங்கமலக்கண்ணன் வெகுவாக பாராட்டினார் .
தேவை தீயணைப்பு நிலையம் :
அதிரையில் தீவிபத்து தொடர்வதும் மக்கள் அணைத்த பிறகு தீயணைப்பு துறையினர் வருவதும் தொடர் கதையாகவே உள்ளது . அது போல் தான் இன்றும் தீயணைப்பு துறையினர் காலதாமதமாகவே வந்தனர் .இந்நிலையை மாற்ற அதிக மக்கட்தொகை கொண்ட நமதூர்க்கு 'தீயணைப்பு நிலையம் ' இன்றியமையாததே இதற்காக நாம் ஒன்றிணைந்து முயல வேண்டியது காலத்தின் கட்டாயம் என பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்திய வலியுறுத்துகிறது .