நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 15 ஜூன், 2012

அரசு பணி நியமனத்தில் பாரபட்சம் வேண்டாம்!

கடந்த மார்ச் மாதத்தில் 1379 மருத்துவர்கல் 10(ஏ) (ஐ) என்ற டி.என்.பி.எஸ்.சி யின் சிறப்பு விதி மூலம் பொது சுகாதார துறையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 
தமிழகத்தில் அனைத்து அரசு தேர்ந்தெடுப்புகளிலும் முஸ்லிம்கள் சமூகத்திற்கு 3.5% தனி இடஒதுக்கீடு வழங்கி வரும் நிலையில் 1349 மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்ட போது ஒரு முஸ்லிம் கூட தேர்வு செய்யப்படவில்லை. கடந்த ஆண்டில் இதே போன்ற தேர்வில் 2438 நபர்களில் 88 பேர் முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.



எகிப்தில் பாராளுமன்றம் கலைப்பு! – மீண்டும் புரட்சியை நோக்கி எகிப்து?


கெய்ரோ:முற்றிலும் எதிர்பாராத விதமாக இஃவானுல் முஸ்லிமீன் பெரும்பான்மை இடங்களை பெற்றுள்ள பாராளுமன்றத்தை கலைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Egypt court dissolves Islamist-led parliament
பாராளுமன்றத்தில் மூன்றில் 2 பகுதி இடங்களுக்கு மட்டுமே அரசியல் கட்சிகள் போட்டியிட இயலும் என்ற சட்டம் மீறப்பட்டதாக கூறி மூன்றில் ஒரு பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களின் தகுதியை உச்சநீதிமன்ற ரத்துச் செய்வதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அவசரக் கூட்டத்தை கூட்டிய எகிப்து ராணுவ கவுன்சில் நீதிமன்றத்தால் தகுதியிழப்பிற்கு ஆளான பாராளுமன்றத்தை முற்றிலும் கலைப்பதாக அறிவித்தது.

வெள்ளி, 25 மே, 2012

எகிப்து அதிபர் தேர்தல்: இஃவான் வேட்பாளர் முர்ஸி முன்னணி!


கெய்ரோ:முப்பது ஆண்டுகள் நீண்ட ஹுஸ்னி முபாரக்கின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு முடிவுக் கட்டிய மக்கள் புரட்சிக்குப் பிறகு ஜனநாயகத்தை நோக்கி நகரும் எகிப்தில் கடந்த 2 தினங்களாக நடைபெற்று வந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிபர் தேர்தலில் முதல் கட்ட முடிவுகள் இஸ்லாமியவாதிகளான இஃவானுல் முஸ்லிமீனின் வேட்பாளர் டாக்டர் முஹம்மது முர்ஸிக்கு சாதகமாக அமைந்துள்ளன.
Muslim Brotherhood Presidential Hopeful Mohamed Mursi
தேர்தலில் தங்களின் வேட்பாளர் முஹம்மது முர்ஸி முன்னணி வகிப்பதாகவும், அதிபரை தேர்வுச் செய்வதற்கான அடுத்தக்கட்ட தேர்தலில் அவர் முன்னாள் பிரதமர் அஹ்மத் ஷஃபீக்குடன் போட்டியிடுவார் என இஃவான் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் எஸ்.டி.பி.ஐ சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

சென்னை: கூடங்குளம் அணு உலை எதிர்பாளர்களுக்கு எதிராக போடப்பட்ட பொய் வழக்குகளை உடனே வாபஸ் பெற வேண்டும், அவர்களுடைய கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக சென்னை மெமோரியல் ஹால் அருகே வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐயின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

பெப்சி – கோக் மானங் கெட்டவர்களின் பானம்!

இந்திய இயற்கை வளத்தின் சராசரி நிறம் எதுவாகவிருக்கும்? செம்மண், கரிசல், வண்டல், பசுமை என நீங்கள் கருதினால் அது தவறு. கடந்த 10 ஆண்டுகளில் பெப்சியும் – கோக்கும் இணைந்து நீலத்தையும் – சிவப்பையும் இந்தியாவின் தேசிய நிறமென மாற்றிவிட்டன. பெட்டிக் கடைப் பெயர்ப் பலகைகள், பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள், தொலைக்காட்சி விளம்பரங்கள் எங்கும் எதிலும் பெப்சி – கோக் மயம். மாநகரத் தெருக்களில் கோலாக்களின் லாரிகள் அட்டையாய் ஊர்கின்றன. பெப்சியின் மூடிகளை சேகரித்து பரிசுப் பொருள் வாங்க அலையும் மேட்டுக்குடி சிறுவர்களுக்கு அது ஓய்வு நேரத் தொழிலாகிவிட்டது. 
ஓராண்டில் ஒரு அமெரிக்கன் குடிக்கும் குளிர்பான பாட்டில்களின் சராசரி எண்ணிக்கை 700. இப்போது அமெரிக்க மக்கள் தண்ணீர் அருந்துவதில்லை. தாகம் வந்தால் அவர்கள் நினைவுக்கு வருவது பெப்சி – கோக்கின் கோலாக்கள்தான். இப்படி நீர் குடிக்கும் பழக்கத்தை ஒழித்து, அமெரிக்க மக்களின் இரத்தத்தில் கலந்து விட்ட கோக் வெறும் குளர்பானம் மட்டுமல்ல. பெப்சி – கோக்கில் அப்படி எனன்தான் இருக்கிறது? அதைவிட அவற்றை மேற்கத்திய வாழ்வின் அங்கமாக ஒரு போதையாக எப்படி மாற்றினார்கள் என்பதே முக்கியமானது. அதில்தான் இரு சோடாக் கம்பெனிகள் பல்லாயிரம் கோடி சொத்துக்களுடன் ஒரு உலக சாம்ராஜ்ஜியம் நடத்தி வரும் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. 

வியாழன், 24 மே, 2012

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை நிபந்தனையின்றி திரும்பப் பெற SDPI கோரிக்கை


சென்னை:கூடங்குளம் போராட்டக்குழு மற்றும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை எந்த நிபந்தனையுமின்றி திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மே25 ல் சென்னை மெமோரியல் ஹால் முன்பு சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகிறது.
SDPI demands unconditional withdrawal of cases against protesters who applied koodankulam
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி விடுத்துள்ள பத்திரிக்கை அறிக்கை வருமாறு
‘கூடங்குளம்  அணு மின் நிலையத்தை எதிர்த்து அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த 6 மாத காலமாக தன்னெழுச்சியோடு போராடி வருகின்றனர்.

சனி, 19 மே, 2012

மத்திய அரசுக்கு முஸ்லிம் என்ற வார்த்தையை உச்சரிக்க அச்சம்!-ஹர்ஷ் மந்தர் சாடல்!


புதுடெல்லி:சிறுபான்மை மக்கள் வாழும் மாவட்டங்களை மையமாக கொண்டு மத்திய அரசு தயாராக்கிய சிறப்பு திட்டம் எவ்வித பலனையும் அளிக்கவில்லை என்று சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹர்ஷ் மந்தர் மத்திய அரசை சாடியுள்ளார்.
harshmander
முஸ்லிம்களின் நிலைமையை மாற்ற உண்மையிலேயே மத்திய அரசு விரும்புமானால் மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் மறுதலிக்கும் போக்கை கைவிடவேண்டும் என்று ஹர்ஷ் மந்தர் வலியுறுத்தியுள்ளார்.

வியாழன், 17 மே, 2012

கத்தரில் தேஜஸ் நாளிதழின் பதிப்பு துவக்கம்!


தோஹா:உலக நாடுகளில் வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் கத்தரின் காலைப் பொழுதை அலங்கரிக்க மலையாள நாளிதழான தேஜஸ் தனது பதிப்பை துவக்கியுள்ளது. மலையாளிகளின் பத்திரிகை வாசிப்பில் மாற்றத்தைக் கொண்டுவந்த தேஜஸ் வளர்ச்சியை நோக்கி பீடு நடைபோடுவதன் வெளிப்பாடே கத்தரின் புதிய பதிப்பு உணர்த்துகிறது.
thejas
கத்தரின் அரசு பிரதிநிதிகள், வர்த்தக பிரமுகர்கள், வாசகர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் கல்ஃப் தேஜஸின் நான்காவது பதிப்பின் வெளியீடு துவக்கப்பட்டது.

புதன், 16 மே, 2012

கீரைகளின் மருத்துவ பண்புகள்


அழகுக்கு அழகு சேர்த்து பசியையும் தூண்டுவது கீரைகள். நமது உடல் நலத்தை பேணிக்காப்பதில் தானியவகைகள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில்கீரைகள் மிகச்சிறந்த இடத்தைப் பெறுகின்றன. கீரைகளில் புரதமும், கொழுப்புச்சத்தும் மிகக்குறைந்தஇடத்தைப் பெறுகின்றன. கீரைகளில் புரதமும், கொழுப்பும் மிகக்குறைந்த அளவிலும், உடலுக்குத்தேவையான நோய் எதிர்ப்புச் சத்தியை அளிக்கவல்ல வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிகஅளவில் இருக்கின்றன. சீரண மண்டலம் சீராகச் செயல்படுவதற்குத் தேவையான நார்ச்சத்து கீரைவகைகளில் அதிகமாகக் காணப்படுகின்றது.

பாப்புலர் ஃப்ரண்டின் சமூம மேம்பாடு பணிகள் - ஏப்ரல் மாத ரிப்போர்ட்

               பாப்புலர் ஃப்ரண்டின் சமூம மேம்பாடு பணிகள் - ஏப்ரல் மாத ரிப்போர்ட்

  1.    கடையநல்லூரில் ஏழை குடும்பத்திற்கு ரூ.5000/- மதிப்புள்ள தையல்   மிஷின் வழங்கப்பட்டது.
  2.        கடையநல்லூரில் விபத்தினால் பாதிக்கப்பட்ட ஏழை ஒருவருக்கு  மருத்துவ உதவியாக ரூ.5000/- வழங்கப்பட்டது.   
  3.        கடையநல்லூரில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஏழை முதியவர்    ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூ.2000/-  வழங்கப்பட்டது.
  4.    கடையநல்லூரில் ஏழை பெண்ணின் திருமணத்திற்காக‌ ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.
  5.  5.  கடையநல்லூரில் 2 ஏழை சிறுவர்களுக்கு கத்னா செய்வதற்காக    ரூபாய் 1000/- வழங்கப்பட்டது.
  •       
  •       பல்வேறு சிகிச்சைக்காக பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர்கள்  ஏப்ரல்  மாதத்தில் மட்டும் 35 யூனிட்க்கு மேலாக இரத்த தானம் செய்துள்ளார்கள்.

செவ்வாய், 15 மே, 2012

அவதூறுச் செய்தி:13 பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் மீது ப்ரஸ் கவுன்சிலில் பாப்புலர் ஃப்ரண்ட் புகார்!


டெல்லி:பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக அவதூறு செய்திகளை பரப்பிய  13 பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் மீது பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புகார் செய்துள்ளது.
press council of india
இதுகுறித்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீஃப் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
“சட்டபூர்வ எச்சரிக்கை நோட்டிஸ் பத்திரிகைகளுக்கு அனுப்பிய பின்பும் முறையான பதிலை தராத காரணத்தால் செய்தி நிறுவனங்களுக்கு எதிராக ஒழுங்கு முறை ஆணையத்தை பாப்புலர் ஃபிரண்ட் அணுக நேர்ந்தது.

கர்நாடகா, ராஜஸ்தான், ஜார்கண்ட், குஜராத்:கண்ணைக் கட்டுதே – திணரும் பா.ஜ.க மேலிடம்!


புதுடெல்லி:அடுத்தடுத்து ஒவ்வொரு மாநில பிரிவுகளிலும் ஏற்படும் குழப்பங்களையும், பிரச்சனைகளையும் தீர்ப்பதில் பா.ஜ.க மேலிடத்திற்கு இப்பவே கண்ணைக்கட்ட ஆரம்பித்துவிட்டதாம்.
திணரும் பா.ஜ.க மேலிடம்
கர்நாடகாவில் எடியூரப்பாவும், ராஜஸ்தானில் வசுந்தராஜே சிந்தியாவும் தம் வசம் வைத்திருக்கும் எம்.எல்.ஏக்களை காட்டி பா.ஜ.க மேலிடத்தை மிரட்டி வரும் வேளையில், குஜராத்தில் முன்னாள் முதல்வரும் பா.ஜ.கவின் மூத்த தலைவருமான கேசுபாய் பட்டேல் மோடி எதிர்ப்பை கிளறிவிட்டு கட்சிக்கு அச்சுறுத்தலை விடுத்து வருகிறார்.

புதன், 2 மே, 2012

குடியரசு தலைவர்:முஸ்லிம் வேட்பாளருக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு!


டெல்லி குடியரசுத் தலைவராக ஒரு முஸ்லிம் வரவேண்டும் என்பதுதான் எங்களுடைய கட்சியின் நிலை என்று கூறிய சமாஜ்வாதி கட்சித் தலைவர்களில் ஒருவரான கமால் பரூக்கி கூறியுள்ளார்.
முஸ்லிம் வேட்பாளருக்கு சமாஜ்வாதி கட்சி ஆதரவு!
இந்தத் தேர்தலை மத அடிப்படையில் அணுகக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு அறிவுரை வழங்கினார். குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, மாநிலங்களவை துணைத் தலைவர் கே. ரஹ்மான் கான், தலைமைத் தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய். குரைஷி ஆகிய மூவரில் ஒருவரை வேட்பாளராக நிறுத்தலாம் என்றார். இந்த மூவரும் திறமைசாலிகள், அவரவர் துறைகளில் முத்திரை பதித்தவர்கள் என்று பாராட்டினார்.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2012

கடையநல்லுர் மர்ம காய்ச்சல் விழிப்புணர்வு !

கடையநல்லூர் -  சில வருடங்களாக பரவி வரும் மர்ம காய்ச்சலை தடுப்பதற்கு என்ன வழி என்பதை துண்டு பிரசுரங்கள் மூலம் பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர்கள் வீடு வீடாக விழிப்புணர்வை ஏற்படுத்திய காட்சி.


கேரளா:காவியாகும் கம்யூனிசத்தின் செங்கொடி!


கேரள மாநிலம் தலச்சேரியில் என்.டி.எஃப் அமைப்பின் உறுப்பினர் முஹம்மது ஃபஸல் கடந்த 2006-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கம்யூனிச வெறியர்களால் படுகொலைச் செய்யப்பட்டார். தற்பொழுது இவ்வழக்கை மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் தொடர்பிருப்பது சி.பி.ஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவியாகும் கம்யூனிசத்தின் செங்கொடி!
இந்நிலையில் வழக்கை ஏற்கனவே சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்பொழுது தங்களின் முக்கிய தலைவர்கள் இவ்வழக்கில் சிக்கிவிடுவார்கள் என அஞ்சி அவதூறுகளை பாசிச காவிகளை மிஞ்சும் வகையில் பரப்புரைச் செய்து வருகின்றனர்.

டெரரிஸ்டுகள் அல்ல மாவோயிஸ்டுகள்!

சென்னை: பயங்கரவாதம் என்பது தேசம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் முக்கியமானதொன்றாகும். காரணம் பயங்கரவாத தாக்குதல்களினால் எண்ணெற்ற உயிர் சேதங்கள், பொருட்சேதங்களும் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் இந்த பயங்கரவாத தாக்குதல்கள் ஒரு வித பீதியை ஏற்படுத்தியுள்ளது என கூறலாம்.



இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்துவதற்கு சங்கப்பரிவார ஃபாசிஸ்டு தீவிரவாதிகளை விட கொரூரமானவர்கள் உண்டு என்றால் அது கம்யூனிஸ தீவிரவாதமான மாவோயிஸ்டுகள் தான். முக்கிய பிரமுகர்களை கடத்தி கொல்வது, காவல்துறை அதிகாரிகளை கொலை செய்வது, காவல் நிலையங்களுக்கு தீ வைப்பது, பொதுமக்கள் பயணம் செய்யும் இரயில் வண்டிகளுக்கு குண்டு வைத்து கவிழ்த்து ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறார்கள் மாவோயிஸ்டுகள்.

வியாழன், 26 ஏப்ரல், 2012

ரியாத் மாநகரில் அனைத்து மத சகோதரர்களுக்கான ஒன்று கூடல் நிகழ்ச்சி



ஹைதராபாத் கலவரம்:அரசியல் ஆதாயம் தேட ஹிந்துத்துவா சக்திகளின் சதித்திட்டம் – உண்மை கண்டறியும் குழு!


புதுடெல்லி:ஹைதராபாத் பழைய நகரத்தில் நடந்த வகுப்பு கலவரம் இரு சமூகங்கள் இடையே வகுப்பு பிரிவினையை உருவாக்கி ஆதாயம் தேட முயன்ற ஹிந்துத்துவா சக்திகளின் சதித்திட்டம் என்று உண்மைக் கண்டறியும் குழுவின் அறிக்கை கூறுகிறது.
Anti-Muslim riots
வகுப்புக் கலவரத்தின் மூலம் 2014-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆந்திரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் மக்களவை பொதுத் தேர்தலிலும் ஆதாயம் தேடுவதே ஹிந்துத்துவா சக்திகளின் நோக்கம் என்றும், கலவரத்திற்கான சதித்திட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கும் பங்குண்டு என்று அறிக்கை கூறுகிறது.

புதுடெல்லியில் இஸ்ரேலை கண்டித்து எழுச்சியுடன் நடைபெற்ற பேரணி

புதுடெல்லி: உலக பயங்கரவாத நாடான இஸ்ரேலுடன் எவ்வித உறவையும் ஏற்படுத்தக்கூடாது என்றும், இதுவரை அந்நாட்டோடு இருக்கின்ற எல்லா உறவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முஸ்லிம் சமுதாயத்தின் இயக்கங்கள் பல ஒன்றினைந்து இன்று காலை 10 மணியளவில் பாராளுமன்றம் நோக்கி மாபெரும் பேரணியை நடத்தியது. பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். விரிவான செய்திகள் பின்னர் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்!