NOV 2013
வியாழன், 5 ஜூலை, 2012
செவ்வாய், 3 ஜூலை, 2012
கண்ணை மறைக்கும் காவிப் புழுதி - உருது மொழியை அழிக்க ஆர்.எஸ்.எஸ் திட்டம்
குவஹாத்தி:அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துயர் துடைப்பு பணிகளில் ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசனின் தன்னார்வ தொண்டர்கள் தீவிரமாக களமிறங்கி பணியாற்றி வருகின்றனர்.உணவு, குடிநீர், மருந்துகள் ஆகியவற்றை துயர் துடைப்பு படகுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விநியோகம் செய்யப்பட்டன.
சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்!
அண்மையில் நமது தமிழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்
முடிவு காலை உணவின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பியது.
காலையில் இட்லி-சாம்பார், பொங்கல், ப்ரட்
உணவுகளை சாப்பிடுபவர்களை தனித்தனியாக ஆய்வுக்கு உட்படுத்தியதில் இட்லி-சாம்பார்
சாப்பிடும் குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக திகழ்கின்றார்கள் என்பது
தெரியவந்தது.
‘காலை
உணவா? அதற்கு
எங்கே நேரம்?’ என
அலட்சியமாக கேட்பவர்களும் நம்மில் உள்ளனர். நம்மிடம் இருக்கும் கெட்டப்
பழக்கங்களில் காலை உணவை(ப்ரேக் ஃபாஸ்ட்) தவிர்ப்பதும் அடங்கும்.
கடையநல்லுரில் ஆண்டுதோறும் டெங்கு :-
தமிழ்நாட்டில்
டெங்கினால் அதிகபடசம் 40 பேர் கடையநல்லுரில் தான் இறந்து உள்ளனர். கடையநல்லூர்
மற்றும் தட்டான்குளம்,சுந்தரபாண்டியபுரம் பகுதிகளில் கடந்த 29.05.2012 அன்று ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது.
கடையநல்லுரைச் சேர்ந்த துராப்ஷா என்பவர் எங்களிடம் கூறியதாவது :- கடையநல்லுரில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் மர்மக்காய்ச்சல் வருவது வழக்கம். பல ஆண்டுகளாக இது இருந்து வருகிறது. இதில் 30,40 பேர் வரை உயிர் இழப்பது வாடிக்கை. இந்த ஆண்டு இந்தக் காய்ச்சல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியதால் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றார்.
வடகரையில் இலவச கல்வி உபகரணங்கள் வழங்கம் விழா
,ytr fy;tp cgfuzq;fs;
toq;Fk; tpoh
ghg;Gyh; /g;uz;l; M/g; ,e;jpah-tpd; r%f Nkk;ghl;Lj;Jiwapd;
rhu;ghf ,e;jpah KOtJk; ,yl;rj;jpw;Fk; Nkw;gl;l Vio Foe;ijfSf;F gs;sp cgfuzq;fis
“gs;sp nry;Nthk;-2012” vd;w jpl;lj;jpd; fPo; toq;fp tUfpwJ.
,jd; xU gFjpahf 26.06.2012(nrt;tha;fpoik)md;W tlfiu ijf;fh
jplypy; fy;tp cgfuzq;fs; toq;Fk; tpoh eilngw;wJ. tpohtpw;f;F khtl;l jiytu;
Yf;khd; `f;fPk; B.A,BL jiyik tfpj;jhu;. khtl;l nrayhsu; ru;jhu; muhgj; B.SC,LLB njhFj;J
ஹைதராபாத்தில் பள்ளி செல்வோம் பிரச்சாரம்
ஹைதராபாத்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பள்ளி செல்வோம் பிரச்சார நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது.
தேசிய அளவில் பாப்புலர் ஃப்ரண்ட் மேற்கொண்டு வரும் பள்ளி செல்வோம் பிரச்சாரம் நாட்டின் பல பாகங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 250 குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இராமநாதபுரம் காவல்துறையின் சூழ்ச்சி முறியடிப்பு
இராமநாதபுரம் காவல்துறையின் சூழ்ச்சி முறியடிப்பு
பெரியப்பட்டிணம்: இராமநாதபுரம் மாவட்டம்
பெரியப்பட்டிணத்தில் சுய ஒழுக்க பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட்
உறுப்பினர்களை தீவிரவாத கும்பலை பிடிப்பது போல அதிரடியாக கைது செய்து பரபரப்பை
ஏற்படுத்திய காவல்துறையின் சூழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள்
முறியடித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை
செய்யப்பட்டனர்.இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர்
காலித் முஹம்மது பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது;
வெள்ளி, 15 ஜூன், 2012
அரசு பணி நியமனத்தில் பாரபட்சம் வேண்டாம்!
கடந்த மார்ச் மாதத்தில் 1379 மருத்துவர்கல் 10(ஏ) (ஐ) என்ற டி.என்.பி.எஸ்.சி யின் சிறப்பு விதி மூலம் பொது சுகாதார துறையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் அனைத்து அரசு தேர்ந்தெடுப்புகளிலும் முஸ்லிம்கள் சமூகத்திற்கு 3.5% தனி இடஒதுக்கீடு வழங்கி வரும் நிலையில் 1349 மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்ட போது ஒரு முஸ்லிம் கூட தேர்வு செய்யப்படவில்லை. கடந்த ஆண்டில் இதே போன்ற தேர்வில் 2438 நபர்களில் 88 பேர் முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

எகிப்தில் பாராளுமன்றம் கலைப்பு! – மீண்டும் புரட்சியை நோக்கி எகிப்து?
கெய்ரோ:முற்றிலும் எதிர்பாராத விதமாக இஃவானுல் முஸ்லிமீன் பெரும்பான்மை இடங்களை பெற்றுள்ள பாராளுமன்றத்தை கலைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் மூன்றில் 2 பகுதி இடங்களுக்கு மட்டுமே அரசியல் கட்சிகள் போட்டியிட இயலும் என்ற சட்டம் மீறப்பட்டதாக கூறி மூன்றில் ஒரு பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களின் தகுதியை உச்சநீதிமன்ற ரத்துச் செய்வதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அவசரக் கூட்டத்தை கூட்டிய எகிப்து ராணுவ கவுன்சில் நீதிமன்றத்தால் தகுதியிழப்பிற்கு ஆளான பாராளுமன்றத்தை முற்றிலும் கலைப்பதாக அறிவித்தது.
சனி, 26 மே, 2012
வெள்ளி, 25 மே, 2012
எகிப்து அதிபர் தேர்தல்: இஃவான் வேட்பாளர் முர்ஸி முன்னணி!
கெய்ரோ:முப்பது ஆண்டுகள் நீண்ட ஹுஸ்னி முபாரக்கின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு முடிவுக் கட்டிய மக்கள் புரட்சிக்குப் பிறகு ஜனநாயகத்தை நோக்கி நகரும் எகிப்தில் கடந்த 2 தினங்களாக நடைபெற்று வந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அதிபர் தேர்தலில் முதல் கட்ட முடிவுகள் இஸ்லாமியவாதிகளான இஃவானுல் முஸ்லிமீனின் வேட்பாளர் டாக்டர் முஹம்மது முர்ஸிக்கு சாதகமாக அமைந்துள்ளன.
தேர்தலில் தங்களின் வேட்பாளர் முஹம்மது முர்ஸி முன்னணி வகிப்பதாகவும், அதிபரை தேர்வுச் செய்வதற்கான அடுத்தக்கட்ட தேர்தலில் அவர் முன்னாள் பிரதமர் அஹ்மத் ஷஃபீக்குடன் போட்டியிடுவார் என இஃவான் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் எஸ்.டி.பி.ஐ சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
சென்னை: கூடங்குளம் அணு உலை எதிர்பாளர்களுக்கு எதிராக போடப்பட்ட பொய் வழக்குகளை உடனே வாபஸ் பெற வேண்டும், அவர்களுடைய கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக சென்னை மெமோரியல் ஹால் அருகே வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐயின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
இந்த ஆர்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐயின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
பெப்சி – கோக் மானங் கெட்டவர்களின் பானம்!
இந்திய இயற்கை வளத்தின் சராசரி நிறம் எதுவாகவிருக்கும்? செம்மண், கரிசல், வண்டல், பசுமை என நீங்கள் கருதினால் அது தவறு. கடந்த 10 ஆண்டுகளில் பெப்சியும் – கோக்கும் இணைந்து நீலத்தையும் – சிவப்பையும் இந்தியாவின் தேசிய நிறமென மாற்றிவிட்டன. பெட்டிக் கடைப் பெயர்ப் பலகைகள், பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள், தொலைக்காட்சி விளம்பரங்கள் எங்கும் எதிலும் பெப்சி – கோக் மயம். மாநகரத் தெருக்களில் கோலாக்களின் லாரிகள் அட்டையாய் ஊர்கின்றன. பெப்சியின் மூடிகளை சேகரித்து பரிசுப் பொருள் வாங்க அலையும் மேட்டுக்குடி சிறுவர்களுக்கு அது ஓய்வு நேரத் தொழிலாகிவிட்டது.
ஓராண்டில் ஒரு அமெரிக்கன் குடிக்கும் குளிர்பான பாட்டில்களின் சராசரி எண்ணிக்கை 700. இப்போது அமெரிக்க மக்கள் தண்ணீர் அருந்துவதில்லை. தாகம் வந்தால் அவர்கள் நினைவுக்கு வருவது பெப்சி – கோக்கின் கோலாக்கள்தான். இப்படி நீர் குடிக்கும் பழக்கத்தை ஒழித்து, அமெரிக்க மக்களின் இரத்தத்தில் கலந்து விட்ட கோக் வெறும் குளர்பானம் மட்டுமல்ல. பெப்சி – கோக்கில் அப்படி எனன்தான் இருக்கிறது? அதைவிட அவற்றை மேற்கத்திய வாழ்வின் அங்கமாக ஒரு போதையாக எப்படி மாற்றினார்கள் என்பதே முக்கியமானது. அதில்தான் இரு சோடாக் கம்பெனிகள் பல்லாயிரம் கோடி சொத்துக்களுடன் ஒரு உலக சாம்ராஜ்ஜியம் நடத்தி வரும் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.
வியாழன், 24 மே, 2012
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை நிபந்தனையின்றி திரும்பப் பெற SDPI கோரிக்கை
சென்னை:கூடங்குளம் போராட்டக்குழு மற்றும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை எந்த நிபந்தனையுமின்றி திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மே25 ல் சென்னை மெமோரியல் ஹால் முன்பு சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துகிறது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி விடுத்துள்ள பத்திரிக்கை அறிக்கை வருமாறு
‘கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த 6 மாத காலமாக தன்னெழுச்சியோடு போராடி வருகின்றனர்.
சனி, 19 மே, 2012
மத்திய அரசுக்கு முஸ்லிம் என்ற வார்த்தையை உச்சரிக்க அச்சம்!-ஹர்ஷ் மந்தர் சாடல்!
புதுடெல்லி:சிறுபான்மை மக்கள் வாழும் மாவட்டங்களை மையமாக கொண்டு மத்திய அரசு தயாராக்கிய சிறப்பு திட்டம் எவ்வித பலனையும் அளிக்கவில்லை என்று சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹர்ஷ் மந்தர் மத்திய அரசை சாடியுள்ளார்.
முஸ்லிம்களின் நிலைமையை மாற்ற உண்மையிலேயே மத்திய அரசு விரும்புமானால் மத்திய சிறுபான்மை அமைச்சகத்தின் மறுதலிக்கும் போக்கை கைவிடவேண்டும் என்று ஹர்ஷ் மந்தர் வலியுறுத்தியுள்ளார்.
வியாழன், 17 மே, 2012
கத்தரில் தேஜஸ் நாளிதழின் பதிப்பு துவக்கம்!
தோஹா:உலக நாடுகளில் வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் கத்தரின் காலைப் பொழுதை அலங்கரிக்க மலையாள நாளிதழான தேஜஸ் தனது பதிப்பை துவக்கியுள்ளது. மலையாளிகளின் பத்திரிகை வாசிப்பில் மாற்றத்தைக் கொண்டுவந்த தேஜஸ் வளர்ச்சியை நோக்கி பீடு நடைபோடுவதன் வெளிப்பாடே கத்தரின் புதிய பதிப்பு உணர்த்துகிறது.
கத்தரின் அரசு பிரதிநிதிகள், வர்த்தக பிரமுகர்கள், வாசகர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் கல்ஃப் தேஜஸின் நான்காவது பதிப்பின் வெளியீடு துவக்கப்பட்டது.
புதன், 16 மே, 2012
கீரைகளின் மருத்துவ பண்புகள்
அழகுக்கு அழகு சேர்த்து பசியையும் தூண்டுவது கீரைகள். நமது உடல் நலத்தை பேணிக்காப்பதில் தானியவகைகள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில்கீரைகள் மிகச்சிறந்த இடத்தைப் பெறுகின்றன. கீரைகளில் புரதமும், கொழுப்புச்சத்தும் மிகக்குறைந்தஇடத்தைப் பெறுகின்றன. கீரைகளில் புரதமும், கொழுப்பும் மிகக்குறைந்த அளவிலும், உடலுக்குத்தேவையான நோய் எதிர்ப்புச் சத்தியை அளிக்கவல்ல வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிகஅளவில் இருக்கின்றன. சீரண மண்டலம் சீராகச் செயல்படுவதற்குத் தேவையான நார்ச்சத்து கீரைவகைகளில் அதிகமாகக் காணப்படுகின்றது.
பாப்புலர் ஃப்ரண்டின் சமூம மேம்பாடு பணிகள் - ஏப்ரல் மாத ரிப்போர்ட்
பாப்புலர் ஃப்ரண்டின் சமூம மேம்பாடு பணிகள் - ஏப்ரல் மாத ரிப்போர்ட்
- கடையநல்லூரில் ஏழை குடும்பத்திற்கு ரூ.5000/- மதிப்புள்ள தையல் மிஷின் வழங்கப்பட்டது.
- கடையநல்லூரில் விபத்தினால் பாதிக்கப்பட்ட ஏழை ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூ.5000/- வழங்கப்பட்டது.
- கடையநல்லூரில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஏழை முதியவர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக ரூ.2000/- வழங்கப்பட்டது.
- கடையநல்லூரில் ஏழை பெண்ணின் திருமணத்திற்காக ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.
- 5. கடையநல்லூரில் 2 ஏழை சிறுவர்களுக்கு கத்னா செய்வதற்காக ரூபாய் 1000/- வழங்கப்பட்டது.
- பல்வேறு சிகிச்சைக்காக பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர்கள் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 35 யூனிட்க்கு மேலாக இரத்த தானம் செய்துள்ளார்கள்.
செவ்வாய், 15 மே, 2012
அவதூறுச் செய்தி:13 பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் மீது ப்ரஸ் கவுன்சிலில் பாப்புலர் ஃப்ரண்ட் புகார்!
டெல்லி:பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக அவதூறு செய்திகளை பரப்பிய 13 பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் மீது பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புகார் செய்துள்ளது.
இதுகுறித்து பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீஃப் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
“சட்டபூர்வ எச்சரிக்கை நோட்டிஸ் பத்திரிகைகளுக்கு அனுப்பிய பின்பும் முறையான பதிலை தராத காரணத்தால் செய்தி நிறுவனங்களுக்கு எதிராக ஒழுங்கு முறை ஆணையத்தை பாப்புலர் ஃபிரண்ட் அணுக நேர்ந்தது.
கர்நாடகா, ராஜஸ்தான், ஜார்கண்ட், குஜராத்:கண்ணைக் கட்டுதே – திணரும் பா.ஜ.க மேலிடம்!
புதுடெல்லி:அடுத்தடுத்து ஒவ்வொரு மாநில பிரிவுகளிலும் ஏற்படும் குழப்பங்களையும், பிரச்சனைகளையும் தீர்ப்பதில் பா.ஜ.க மேலிடத்திற்கு இப்பவே கண்ணைக்கட்ட ஆரம்பித்துவிட்டதாம்.
கர்நாடகாவில் எடியூரப்பாவும், ராஜஸ்தானில் வசுந்தராஜே சிந்தியாவும் தம் வசம் வைத்திருக்கும் எம்.எல்.ஏக்களை காட்டி பா.ஜ.க மேலிடத்தை மிரட்டி வரும் வேளையில், குஜராத்தில் முன்னாள் முதல்வரும் பா.ஜ.கவின் மூத்த தலைவருமான கேசுபாய் பட்டேல் மோடி எதிர்ப்பை கிளறிவிட்டு கட்சிக்கு அச்சுறுத்தலை விடுத்து வருகிறார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


