நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 2 டிசம்பர், 2011

ராம்லீலா மைதானத்தில் அலைகடலென குவிந்த மக்கள் வெள்ளம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக நீதி மாநாடு நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது. முதல் நாளான நவம்பர் 26ம் தேதி நேஷனல் மில்லி கன்வென்ஷன், மற்றும் நேஷன்ல செமினால் ஆகிய இரு கருத்தரங்கங்கள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். இரண்டாம் நாளான 27ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 



சரியாக மதியம் 1.00 மணி அளவில் ஒற்றுமை கீதத்துடன் மாநாடு தொடங்கியது. பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீஃப் வரவேற்புரை நிகழ்த்தினார். பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் " நீதியின் தாகத்தினால்தான் கொள்கைகள் உருவாகின்றன. சமூக மாற்றத்திற்கான தேவை தூண்டப்பட்டு புரட்சிகளும், புரட்சியாளர்களும் உருவாகின்றனர். சமகால உலகத்தில் ஜனநாயகத்தின் தேடலில் ஜனநாயக ரீதியில் போராடியததையும் , சில நேரங்களில் விரும்பத்தகாத நிகழ்வுகளை எகிப்தின் தஹ்ரீர் சதுக்கத்திலிருந்து அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் வரை பார்த்தோம். 


சமூக அரசியல், பொருளாதார நீதி கிடைக்காதவர்களின் வெளிப்பாடுதான் இது. தலைவர்கள் மக்களுக்கு நீதி வழங்க தவறும் போது இந்த தேசத்தின் ஒற்றுமை மற்றும் இறையான்மை பாதிக்கப்படுகின்றது. ஆக "தேசத்தை நீதியால் கட்டமைப்போம்" என்ற இந்த மாநாடு இந்தியாவிலுள்ள அரசியல் சக்திகளுக்கு, நம்மை சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதனை உணர்த்தும் ஒரு பாடமாகும். என்பதை உணரச் செய்வதுமே ஆகும்.

காங்கிரஸும், பா.ஜ.கவும் ஊழல் மற்றும் பல விஷயங்களில் நண்பர்களாகவே உள்ளனர். ஆளும் அதிகாரவர்க்கம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கிடையேயான உறவில் நம்முடைய இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு, தலித்கள், பழங்குடியினர்கள் தங்களின் வாழ்விடங்களை விட்டு துரத்தப்படுகின்றனர். முஸ்லிம்களோ மேலும், மேலும் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதும், நம்முடைய சமூக மக்கள் மீண்டும் ஒருமுறை பிரிக்கப்பட்டதற்கு காரணம் ஆகும். நம்முடைய தேசத்தின் மீது நீங்காத கரையாக இருப்பது பாபரி மஸ்ஜிதின் இடிப்பாகும். அந்த வரலாற்றுப்பிழை திருத்தப்படவேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக நம்முடைய அரசியல் தலைவர்கள் வசதியாக அதனை மறந்துவிடவே விரும்புகின்றனர்.

நாம் நீதியின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாக, இந்த தேசத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக பாபரி மஸ்ஜித் மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும் என விரும்புகிறோம். மீடியாக்கள் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை கையில் எடுத்தது வரவேற்கத்தக்கதாகும். சொல்லப்போனால் மதவாதம் தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். மதவாதம் தான் முதலில் கழையப்படவேண்டிய ஒன்றாகும். ஊழலுக்கு எதிரான போராட்டம் ஃபாசிஸத்தை இந்தியாவிலிருந்து துடைத்தெறிந்தால் மட்டுமே வெற்றி பெரும்.

நாட்டில் நடந்த 12 குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லிம்களே காரணம் என அவர்கலை சிறையில் தள்ளி அழகு பார்த்த வேலையில் அனைத்து குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் சங்கப்பரிவார சக்திகளே என்பதை கண்டுபிடித்து, அதற்கு விலையாக தன்னுடைய இன்னுயிரையும் நீத்த மாவீரன் ஹேமந்த் கர்கரே நம்முடைய மரியாதையை காணிக்கையாக்குகிறோம். இருப்பினும் நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு முஸ்லிம்களே காரணம் என்று ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டம் (UAPA) போன்ற ஆள்தூக்கி சட்டங்களில் சிறையில் வாடுவது கவலைக்குரிய விஷயமாகும். அவர்களுக்கு பிணையும் கிடைக்கவில்லை. எனவே இம்மாநாட்டின் மூலமாக சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டம் மற்றும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்ட ( ) போன்றவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

அதே போன்று நாட்டில் 1992 லிருந்து நடைபெற்ற அனைத்து குண்டு வெடிப்புகளையும் மீள் விசாரணை செய்து ஒரு வெள்ளையறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நாம் அனைத்து கட்சித் தலைவர்களையும் கேட்டுக்கொள்வது என்னவென்றால் உறுதியான நிலைப்பாட்டுடன் நமது நாட்டின் மதச்சார்பற்ற தன்மை, இடஒதுக்கீடு போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும்" என்று உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்கள் சிறப்புரையாற்றினார்கள். சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின்  தேசியத் தலைவர் அபூபக்கர் சாஹிப் உரையாற்றுகையில் " நம்முடைய அருமையான தேசம் மதச்சார்பற்ற கொள்கைகளிலிருந்து விலகிச்சென்று கொண்டிருக்கிறது. நம்முடைய மதச்சார்பற்ற தன்மை என்ற கொள்கை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிக்கியுள்ளது. முஸ்லிம்கள் அந்த குறுகிய வட்டத்தில் சிக்கி தனிமைப்படுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு, பொது சமூகத்திலிருந்து மிதித்து தூக்கியெறியப்பட்டுள்ளனர். அதற்கு நாம் பல உதாரணங்களை கோடிட்டு காட்ட முடியும். பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது, அதில் தலையாயதாகும். பாபரி மஸ்ஜித் மீள் நிர்மாணம் செய்ய வேண்டுமெனில் இந்தியா இழந்த மதச்சார்பற்ற கொள்கைகளை திரும்பப் பெற வேண்டும்.

நம்முடைய ஜனநாயகம் இப்பொழுது நோய்வாய்ப்பட்டுள்ளது. நமது அரசியல் கட்சிகள்தான் இந்த அவல நிலையை ஏற்படுத்தியுள்ளன. பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பதவிகள் பணம் கொடுத்து வாங்கப்படுகின்றது. பொதுமக்கள் ஆதரவும், கருத்தும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்படுகின்றது. உயர் ஜாதியினர் சொல்வதுதான் ஜனநாயகம் என்றாகிவிட்டது. நாம் நம்முடைய கொள்கை மற்றும் நாட்டு  நலனிலிருந்து நீண்ட தூரம் விலகி வந்துவிட்டோம். மேலும் நமது நாடு இன்று தனி நபர்களின் கைகளிலும், வெளிநாட்டு சக்திகளிடமும் சிக்குண்டு கிடக்கின்றது. தலை முதல் கால் வரை நாடு ஊழலில் மூழ்கியுள்ளது. நாட்டின் இயற்கை மற்றும் வளங்களின் மீது அக்கறையற்றவர்கள் அதிகாரவர்க்கத்தில் உள்ளனர். கூடங்குளம் போன்ற மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய அணு உலைகள் அமைக்க அனுமதிக்கப்பட்டு செயல்பாட்டிற்கும் வரவிருக்கின்றன. அரசு, அணுசக்திதான் நாம் விடும் மூச்சு என்றும் நம்மை நம்பவைக்கின்றன, அதிகாரவர்க்கம் நாம் குடிக்கும் நீர் எனவும், அமெரிக்காவும், இஸ்ரேலும் நாம் உண்ணும் உணவு என்றும் நம்மை ஏமாற்றுகின்றனர்.  மொத்தத்தில் நாம் மரணித்துக்கொண்டிருக்கின்றோம்.

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா பிரகடனத்தை வெளியிட்டார். பாப்புலர் ஃப்ரண்டின் ராஜஸ்தான் மாநில தலைவர் முஹம்மது ஷாஃபி நன்றியுரையாற்றினார்.

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஓ.எம்.ஏ ஸலாம் நிகழ்ச்சியை ஒருங்கினைத்தார். இம்மாநாட்டிற்கு 20 மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.